தமிழில், டம்மி டப்பாசு, ஜோக்கர், ஆண் தேவதை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ள ரம்யா பாண்டியன், போட்டோஷூட் மூலம் மிகவும் பிரபலமானார். பின்னர் சின்னத்திரை நிகழ்ச்சிகளில் கலந்துகொண்ட அவர், பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீசனில் போட்டியாளராக களமிறங்கினார்.

இதில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய அவர் 4-வது இடம் பிடித்தார். இந்த சீசனில் இறுதிப்போட்டி வரை முன்னேறிய ஒரே பெண் போட்டியாளர் இவர்தான். 

இந்நிலையில் நிகழ்ச்சி முடிந்ததும் வீட்டுக்குச் சென்ற ரம்யா பாண்டியனுக்கு குடும்பத்தினரும் ரசிகர்களும் மேளதாளங்கள் முழங்க உற்சாக வரவேற்பு கொடுத்துள்ளனர். அந்த வீடியோவை நடிகை ரம்யா பாண்டியன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.