பொதுவாகவே பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சராசரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழும் ஒவ்வொரு மாதமும் ஓர் இரு நாட்கள் மாற்றம் ஏற்படுவது இயல்பான விடயம் தான்.
ஆனால் பத்து நாட்களுக்கு மேல் தள்ளிப்போதல், ஒரே மாதத்தில் இரண்டு முறை வருதல் போன்ற பிரச்சினைகளை உடனே கண்டறிந்து உரிய வைத்தியரிடம் சிகிச்சை பெற்றுக்கொள்ள வேண்டியது அவசியம்.
முதலில் ஒரே மாதத்தில் இரண்டாவது முறையும் வருவது மாதவிடாயா? என்பது தொடர்பில் அக்கறை செலுத்த வேண்டியது அவசியம். காரணம் வெஜினாவிலிருந்து குருதி கசிவு ஏற்படவும் வாய்ப்பு காணப்படுகின்றது.
இது ஆபத்தான நிலைமை, எனவே இது குறித்து முறையான வைத்திய ஆலோசனை பெற வேண்டியது முக்கியம்.
இந்த வேறுபாட்டை எப்படி கண்டறிவது ?மாதவிடாய் போன்று உதிரப்போக்கு தொடர்சியாக 3 தொடக்கம் 5 நாட்கள் வரை நீடித்தால் அது மாதவிடாய் என அடையாளப்படுத்திக் கொள்ளலாம்.
மாறாக சிறிது உதிரம் மட்டுமே வந்து, நெப்கின் முழுமையாக பயன்படுத்தவில்லை எனில் அது இரத்தம் கசிவதாக இருக்க வாய்ப்பு இருக்கின்றது.
இந்த வெஜினாவில் இரத்தக் கசிவு என்பது உறவு கொள்ளும் போதும் கருச்சிதைவு ஏற்பட்டாலோ அல்லது பிரசவ காலத்திலோதான் பெரும்பாலும் ஏற்படுகின்றது. இவ்வாறான சந்தர்ப்பங்களின் போது உடனே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
உங்களுக்கு தைரொய்ட் அதிகம் சுரந்தாலோ அல்லது குறைவாக சுரந்தாலோ மாதந்தோறும் மாதவிடாயில் சிக்கல்கள் ஏற்படும் வாய்ப்பு காணப்படுகின்றது.
மாதவிடாய் நிற்கும் வயதை எட்டிய நிலையிலும் இவ்வாறு மாதத்தில் இரண்டு முறை மாதவிடாய் ஏற்பட வாய்ப்புள்ளது.
மன அழுத்தம் காரணங்களால் சரியான உணவின்மை, தூக்கமின்மை காரணங்களாலும் மாதவிடாய் இரண்டு முறை வரலாம். மேலும் அதிகளவில் கருத்தடை மாத்திரைகளை உட்கொள்வதாலும் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுகின்றது.
உடனடியாக உடல் எடை குறைந்தாலும் அதிகரித்தாலும் ஹேர்மோன் சமநிலையற்று காணப்படும், இதனாலும் ஏற்படலாம்.
மேலே குறிப்பிட்ட விடயங்கள் உங்கள் வாழ்க்கை முறையோடு ஒத்துப்போவதாகக் கருதினால், இதை சாதாரணமாக கடந்து செல்லாமல் மருத்துவரை அணுகி உரிய சிகிச்சைப் பெறுவது அவசியம்.