வாஸ்து சாஸ்திர படி எந்த இடத்தில் மச்சம் இருந்தால் என்ன பலன் என்பதை இந்த பதிவில் முழுமையாக பார்க்க முடியும்.
மச்சம் என்பது உடலில் இருப்பது இயல்பாகும். மச்ச சாஸ்திரம் படி எந்த இடத்தில் மச்சம் இருக்கிறதோ, அதற்கு சுப, அசுப பலன்கள் இருப்பதாக தெரிகிறது.
வலது கன்னத்தில் மச்சம் உள்ளவர் மிகவும் அதிர்ஷ்டசாலி, இவர்கள் 35 வயதிற்கு ஆடம்பர வாழ்க்கையை பெறுவதாக சாஸ்திரம் கூறுகிறது. உள்ளங்கையின் நடுவில் மச்சம் உள்ளவர்கள் வாழ்க்கையில் வெற்றி அடைவதற்கு உதாரணமானவர்கள்.
இவர்கள் செய்யும் செயல் ஒருபோதும் தோல்வியில் முடியாது. இப்படிப்பட்டவர்கள் கைகளில் எப்போதும் பணம் நிறைந்திருக்கும். மூக்கில் மச்சம் இருந்தால் அது அதிர்ஷ்டத்தை குறிக்கிறது.
இவர்கள் வாழ்க்கையில் அனைத்து ஆடம்பரங்களையும் எளிதில் பெறுவார்கள். இந்த காரணத்தினால் இவர்கள் பணக்காரர்களாக இருப்பார்கள்.
கட்டை விரலில் மச்சம் இருப்பது அவர்களை அதிர்ஷ்டசாலியாக காட்டுகிறது. இவர்களின் வெற்றிக்கு எந்த தடையும் இருக்காதாம்.
மச்சம் இருப்பது சாஸ்திரப்படி நன்மையான விஷயமாக கருதப்படுகின்றது.