பொதுவாகவே தூக்கம் என்பது மனித வாழ்க்கையில் மிகவும் இன்றியமையாதது. தூங்கும் போது கொஞ்சம் சௌகரியமாக இருக்க வேண்டும் என்பதற்காக தலையணையை வைத்திருப்பது வழக்கம்.

தூங்கும் போது உங்கள் தலையை வசதியாக உயரத்தில் வைத்திருக்க இது உதவுகிறது.ஆனால் சில நேரங்களில் கழுத்து வலி, நரம்புத்தளர்ச்சி போன்ற பிரச்சினைகளுக்கு இது காரணமாகின்றது.

தலையணை பயன்படுத்துவதால் ஏற்படும் பிரச்சினைகள் தொடர்பிலும் அதனை தவிர்ப்பதால் கிடைக்கும் நன்மைகள் குறித்தும் இந்த பதிவில் பார்க்கலாம். 

தலையணையை சரியாகத் தேர்வு செய்வது மிகவும் முக்கியம்.பெரும்பாலானவர்கள் தூங்கும்போது இரண்டு தலையணைகளை பயன்படுத்துவார்கள்.

தலையணை இல்லாமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Sleeping Without A Pillow Good Or Bad

ஆனால், சுகாதார நிபுணர்கள் கருத்துப்படி, தலையணையைத் தொடர்ந்து பயன்படுத்துவது உடல் ஆரோக்கியத்தில் பாரிய தாக்கத்தை ஏற்படுத்தும். 

தொடர்ச்சியாக நீண்ட காலத்துக்கு தலையணை பயன்படுத்தினால் கழுத்து வலி, முதுகு பிரச்சினைகள் மற்றும் கடுமையான நோய் நிலைமைகளை உருவாக்கும். 

தலையணை வைத்து தூங்குவது, கழுத்து, முதுகு, தோள்பட்டை வலி, மற்றும் ஒற்றைத் தலைவலி ஏற்படக்கூடும்.

தலையணை இல்லாமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Sleeping Without A Pillow Good Or Bad

உயரமான தலையணை உச்சந்தலையில் இரத்த ஓட்டத்தை குறைப்பதன் காரணமாக கூந்தல் உதிர்வு ஏற்படவும் காரணமாக அமைகின்றது. 

இரு தலையணை பயன்படுத்துவோருக்கு ஆரோக்கியமான தூக்கம் கிடைக்காது. இதனால் பல்வேறு மன அழுத்தம் சோர்வு போன்ற நிலை ஏற்படுகின்றது. 

தலையணை இல்லாமல் தூங்கினால், கழுத்து மற்றும் முதுகு வலிக்கு தீர்வ கிடைக்கும். தலையணை இல்லாமல் துங்கும் போது  முதுகெலும்பின் நிலை சரியாக இருக்கும், இதனால் இடுப்பு, கைகள், மற்றும் தோள்பட்டையில் ஏற்படும் வலியும் குறையும். 

தலையணை இல்லாமல் தூங்கினால் இவ்வளவு நன்மைகள் இருக்கா? | Sleeping Without A Pillow Good Or Bad

தலையணை பயன்படுத்தாமல் தூங்குவது உடல் முழுவதும் சீராண இரத்த ஓட்டத்தை கொடுக்கும். ஒவ்வாமை மற்றும் ஆஸ்துமா அறிகுறிகளையும் குறைக்க உதவும். மேலும் ஆசிட் ரிஃப்ளக்ஸ்,  நெஞ்செரிச்சல் போன்ற பிரச்சினைகளையும் கட்டுப்படுத்த உதவும்.

தூக்கத்தில் மூச்சுத்திணறல் மற்றும் குறட்டை போன்றவற்றை உருவாக்கும் அபாயத்தைக் குறைக்கும். தோள்பட்டை அழுத்தத்தைக் குறைத்து தோள்பட்டை வலியை இல்லாமல் ஆக்க உதவும்.