பொதுவாகவே உணவுகள் மிஞ்சும் பச்சத்தில் அதனை குளிரூட்டியில் வைத்து மறுநாள் சூடாக்கி சாப்பிடும் வழக்கத்தை பெரும்பாலானவர்கள் பின்வற்றுகின்றனர்.
உணவுகளை வீண்விரயம் செய்யக்கூடாது என்பதற்காக இவ்வாறு சூடாக்கி சாப்பிட்டாலும் குறிப்பிட்ட சில உணவுகளை சமைத்ததன் பின்னர் மீண்டும் சூடாக்கி உண்பதால் பல்வேறு ஆரோக்கிய பிரச்சினைகளை எதிர்நோக்க வேண்டி ஏற்படும்.
அந்த வகையில் தவறுதலாக கூட மீண்டும் சூடுப்படுத்தி சாப்பிடவே கூடாத உணவுகள் என்னென்ன என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கோழி
மீண்டும் சூடுபடுத்தி சாப்பிடவே கூடாத உணவுகளில் கோழி இறைச்சி முக்கிய இடம் வகிக்கின்றது. ஆனால் அதை மீண்டும் சூடுபடுத்துவது மிகவும் ஆரோக்கியமற்றது. கோழி இவ்வாறு மீண்டும் வெப்பமேற்றும் போது அதில் உள்ள பாக்டீரியாக்களின் வளர்ச்சி துரிதப்படுத்தப்படுகின்றது. இது உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும்.
காளான்கள்
காளான்களில் அதிகளவில் புரதம் நிறைந்திருப்பதனால் இதனை சமைத்த பின்னர் மீண்டும் சூடாக்குதால் மிகவும் மென்மையாக மாறுவதுடன் சுவையிலும் மாற்றம் ஏற்படுவதுடன் உடல் ஆரோக்கியத்துக்கு தீங்கு விளைவிக்கும் பாக்டீரியாக்களின் பெருக்கமும் அதிகரித்துவிடும்.
எனவே அதனை மீண்டும் சூடாக்கி சாப்பிடுவதை தவிர்த்துக்கொள்ள வேண்டும். சமைத்த பிறகு அதிக நேரம் வைத்திருந்தால், அவற்றில் உள்ள புரதங்கள் மாறி, ஜீரணிக்க கடினமாகிவிடும்.இதுவும் உடல் ஆரோக்கியத்தை பாதிக்கும்.
சாதம்
இந்திய உணவுகளில் அரிசி சாதம் முக்கிய இடம் வகிக்கிக்கின்றது. மதிய உணவுக்காக பெரும்பாலானவர்கள் சாதத்தை எடுத்துக்கொள்வதால் அதனை இரவில் மீண்டும் சூடுபடுத்திச் சாப்பிடும் வழக்கம் பலரிடம் காணப்படுகின்றது. சாதத்தை மீண்டும் சூடுப்படுத்தி சாப்பிடுவதால் அதில் நச்சுத்தன்மை அதிகரித்து, ஃபுட் பாய்சனாக மாறும் வாய்ப்பு அதிகமாக இருக்கின்றது.
சமையல் எண்ணெய்
சமையல் எண்ணெயை ஒருபோதும் மீண்டும் சூடுபடுத்திப் பயன்படுத்தக் கூடாது. அந்த எண்ணெயின் அடர்த்தி அதிகரித்து, பயன்படுத்த முடியாத நிலைக்குத் தள்ளப்பட்டுவிடும்.இது புற்றுநோய், இதய நோய்கள் போன்ற அபாயகரமாக உயிர்கொல்லி நோய்களை ஏற்படுத்தும்.
பீட்ரூட்
பீட்ரூட் மற்றும் கீரை வகைகளில் அதிகளவில் நைட்ரேட்டுகள் காணப்படுகின்றது. அதனால் பீட்ரூட்டையும் மீண்டும் சூடுசெய்து சாப்பிடும் போது நச்சிதன்மையாக மாற அதிக வாய்ப்பு காணப்படுகின்றது. எனவே இதனை ஒருபோதும் மீண்டும் சூடு படுத்தி சாப்பிட கூடாது.