வீட்டில் நாம் வளர்க்காமலே அடிக்கடி பூனைகள் வந்தால் துரத்துவதை நிறுத்திவிட்டு சகுனத்தை அறிந்துகொள்ளுங்கள்.

சில நேரங்களில் வீட்டிற்குள் பூனை வருவது வழக்கமானது. ஆனால் அதற்கான ஆன்மீக அர்த்தம் என்ன என்று நீங்கள் யோசித்ததுண்டா?

ஜோதிடம் மற்றும் ஆன்மீக நம்பிக்கைகளின்படி, பூனைகள் மர்ம சக்தி கொண்ட உயிரினங்களாக கருதப்படுகின்றன. ஒரு பூனை வீட்டிற்கு அடிக்கடி வந்தால், அது சில முக்கிய அறிகுறிகளை வெளிப்படுத்துகிறது.

நீங்கள் வளர்க்காமலே அடிக்கடி வீட்டிற்கு பூனைகள் வருதா? அப்போ இந்த சகுனம் இருக்கிறதாம் | Cat Visits Home Often Mean In Terms Of Omen Vastu

பூனைகள் எதிர்மறை சக்திகள் இருக்கும் இடங்களில் போகாது. எனவே உங்கள் வீட்டிற்கு பூனை வருவது நேர்மறை ஆற்றல் மற்றும் அமைதியான சூழலைக் காட்டுகிறது.

பூனை குட்டி போடுவது மிகவும் சிறந்த சகுனம். இது வீட்டில் குழந்தை பாக்கியம் வரப்போகிறது என்பதைக் குறிக்கும். பூனை சந்திரனுடன் தொடர்புடையது என்பதால், மனநிலை மாற்றம், அதிர்ஷ்டம் போன்றவற்றையும் குறிக்கலாம்.

நீங்கள் வளர்க்காமலே அடிக்கடி வீட்டிற்கு பூனைகள் வருதா? அப்போ இந்த சகுனம் இருக்கிறதாம் | Cat Visits Home Often Mean In Terms Of Omen Vastu

கருப்பு பூனை அதிர்ஷ்டமா? சில நம்பிக்கைகளின்படி, கருப்பு பூனை வீட்டிற்கு வருவது செல்வமும் அதிர்ஷ்டமும் தரும் என கருதப்படுகிறது.

எதிர்மறை அர்த்தங்களும் உள்ளதா? அரிதாக சில நேரங்களில் பூனை வருவது எதிர்மறை சக்திகள் நுழைவைக் குறிக்கலாம். அத்தகைய சூழலில் வீட்டில் பூஜை அல்லது ஹோமம் செய்வது பரிந்துரைக்கப்படுகிறது.

பூனைகளிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும்? பூனைகளை ஒருபோதும் துரத்தக் கூடாது. அவற்றுக்கு அன்பாக உணவளிப்பது நல்ல கர்மாவை ஈர்க்கும். வீடு சுத்தமாகவும், நேர்மறை ஆற்றல்களுடன் இருக்குமானால், பூனைகள் அதனை விரும்பும்.

நீங்கள் வளர்க்காமலே அடிக்கடி வீட்டிற்கு பூனைகள் வருதா? அப்போ இந்த சகுனம் இருக்கிறதாம் | Cat Visits Home Often Mean In Terms Of Omen Vastu

பூனையின் வருகை இயற்கை தரும் ஒரு சின்னம் என கருதப்படுகிறது. இதை நல்ல அடையாளமாகக் கருதி, நேர்மறை மனநிலையுடன் வாழ்வது சிறந்தது என நிபுணர்கள் கூறுகின்றனர்.