பொதுவாக Face Maskக்குகள் முகத்திற்கு மற்றும் சருமத்திற்கு பல நன்மைகளை வழங்குகின்றன. இதை இரவு நேரங்களில் முகத்தில் போடுவது சருமத்திற்கு கூடுதலான பலத்தை வழங்குகிறது.
இரவில் பயன்படுத்தி விட்டு தூங்கச் சென்றால், மென்மையான மற்றும் அழகான சருமத்தை நீங்கள் பெறுவீர்கள்.
அந்த வகையில் முல்தானி மெட்டைியை போடுவதனால் பல நன்மைகள் கிடைக்கின்றன. அதை தொடர்ந்து இந்த பதிவில் பார்க்கலாம்.
முல்தானி மெட்டி
1. முல்தானி மெட்டியை நீங்கள் வேப்பிலையுடன் சேர்த்து உங்களுக்கு ஏற்ற வகையில் Face Pack செய்து வாரத்திற்கு இரண்டு முறை பயன்படுத்தினால் நல்ல பலனை பெறலாம்.
வேம்பில் நுண்ணுயிரை கொல்லக்கூடிய சக்திகள் நிறைவாக உள்ளது. அதனால் சருமத்தில் ஏற்படும் நோய்தொற்றுகளுடன் எதிர்த்து போராட உதவும்.
இதன் காரணமாக சருமம் பிரகாசமாக காணப்படும். இந்த சிறந்த குணங்கள் கொண்ட வேம்பை நீங்கள் முல்தானி மெட்டியுடன் கலந்து போட்டு வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
எண்ணெய் சருமம் கொண்டவர்கள் இதை பயன்படுத்தினால் பிரகாசமான சருமம் கிடைக்கும். இதை முகத்தில் தடவி சுமார் 15-20 நிமிடங்களுக்கு விடவும்.
2. பெண்களின் சிறப்பு பொருளாக மஞ்சள் விளங்குகிறது. இதை சமையலறையிலும் நீங்கள் காணலாம். இதில் அழற்சியை எதிர்க்ககூடிய ஆண்டிசெப்டிக் நிறைந்துள்ளது.
முகப்பரு வந்தால் மஞ்சள் போடுவதன் மூலம் முகப்பரு காணாமல் போய்விடும். இவ்வாறு குணநலங்கள் கொண்ட மஞ்சளை முல்தானி மெட்டியுடன் சேர்த்து பயன்படுத்தினால் முகத்தின் அழகு இரட்டிப்பாக காட்டும்.
மஞ்சள் முல்தானி மெட்டி மற்றும் தேன் சேர்த்து வாரத்திற்கு 2-3 முறை பயன்படுத்தலாம். இந்த கலவையை உங்கள் முகத்தில் தடவி சுமார் 15-20 நிமிடங்களுக்கு விடவும்.
3. தயிர் முகத்தில் உள்ள அழுக்குகளை அகற்றுவதில் சிறப்பு வாய்ந்தது. தயிர் முகப்பருவை இல்லாமல் செய்யும், ஆனால் நீங்கள் முல்தானி மெட்டியுடன் இதை சேர்த்து முகத்தில் தடவும் போது சருமத்தை எப்போதும் ஈரப்பதமாக வைத்திருக்க உதவும். தயிரையும் முல்தானி மெட்டியையும் நல்ல பதத்தில் கலந்து எடுத்து கொள்ளவும்.
பின்னர் இதை முகத்தில் தடவி 15-20 நிமிடங்களுக்கு விடவும். பின்னர் வெதுவெதுப்பான நீரில் முகத்தைக் கழுவ வேண்டும்.