ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒவ்வொரு ராசிக்காரர்களுக்கு ஒவ்வொரு குணங்கள் இருக்கும்.
ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் எதிர்கால வாழ்க்கை மற்றும் ஆளுமையுடன் மிக நெருங்கிய தொடர்பை கொண்ருக்கின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்தவர்கள் இயற்கையாகவே ஸ்டைலாக இருப்பார்களாம். அப்படிப்பட்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
சிம்மம்
சிம்ம ராசிக்காரர்கள் பிறந்தவர்கள் இயற்கையாகவே மற்றவர்களை கவரும் வகையில் ஆளுமை நிறைந்தவர்களாகவும் வசீகர தோற்றத்தை கொண்டவர்களாகவும் இருப்பார்கள்.
இவர்கள் இயல்பாகவே மிகவும் ஸ்டைலாக இருப்பார்கள். இவர்கள் தெரிவு செய்யும் ஆடை மற்றும் இவர்களின் சிகை அலங்காரங்கள் என்பன மிகவும் சிறப்புாகவும் தனித்துவமானதாகவும் இருக்கும்.
துலாம்
துலாம் ராசியினர் அழகின் கிரகமான வீனஸால் ஆளப்படுகின்றமையால் இயல்பாகவே மற்றவர்களை வசீகரிக்கும் வகையில் அதிநவீன, நேர்த்தியான விடயங்களில் கவனம் செலுத்துவார்கள்.
தங்களை எப்போதும் தனித்துவமாக காட்டிக்கொள்ளும் பேஷன் உணர்வை கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் ஸ்டைலாக காட்சியளிப்பதில் வல்லவர்கள் எனலாம்.
ரிஷபம்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் உலக இன்பங்களுக்கு அதிபதியாக இருக்கும் சுக்கிரனால் ஆளப்படுகின்றனர்.
ராசிய இந்த அடையாளம் அழகு மற்றும் ஆடம்பரம் ஆகும். இவர்கள் இயற்கையாகவே மற்றவர்களை காந்தம் போல் ஈர்க்கும் தோற்றத்தை கொண்டிருப்பார்கள்.
ரிஷப ராசிக்காரர்கள் அதிகமாக தங்கள் சம்பாதிக்கும் பணத்தை ஆடைகளுக்கும் அழகுசாதன பொருட்களுக்கும் தான் செலவிடுவார்கள். ஸ்டைலாக இருப்பதையே கலையாக கொண்டவர்கள் இவர்கள் தான்.