இந்தியாவில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து செல்கின்றது. அந்தவகையில் நேற்று ஒரேநாளில் 78 ஆயிரத்து 169 பேர் புதிய தொற்றாளர்களாக இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் ஆயிரத்து 25 பேர் புதிதாக உயிரிழந்துள்ளனர். இதனையடுத்து பாதிக்கப்பட்டுள்ளவர்களின் மொத்த எண்ணிக்கை 37 இலட்சத்து 66 ஆயிரத்து 108 ஆக அதிகரித்துள்ளதுடன், உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 66 ஆயிரத்து 460 ஆக உயர்வடைந்துள்ளது.
மேலும் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 28 இலட்சத்து 99 ஆயிரமாக அதிகரித்துள்ள நிலையில், 8 இலட்சத்திற்கும் அதிகமானோர் தொடர்ந்தும் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
இவர்களில் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் உடல்நிலை கவலைக்கிடமாகவுள்ளமை குறிப்பிடத்தக்கது