பொதுவாக அனைவரின் வாழ்க்கையிலும் திருமணம் என்பது ஒரு சடங்காக பார்க்கப்படுகின்றது.
ஒருவரின் வாழ்க்கையின் பிற்பகுதி மகிழ்ச்சியாகவும், நிம்மதியாகவும் இருக்க வேண்டும் என்றால் அவர்களுக்கு பிடித்தமான வாழ்க்கைத்துணை அமைய வேண்டும்.
காதல், கல்யாணம் இரண்டும் வெவ்வேறு கண்ணோட்டங்களைக் கொண்டுள்ளது.
காதலிக்கும் போது திருமணம் நடக்குமா? நடக்காதா? என ஒரு குழப்பம் இருக்கும். இந்த விடயத்தை தம்பதிகளின் பிறந்த திகதி தான் முடிவுச் செய்கிறது என நியூமராலஜி கூறுகிறது.
நியூமராலஜிபடி, குறிப்பிட்ட சில தேதிகளில் பிறந்தவர்கள் காதல் திருமணம் செய்ய அதிக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகின்றது. அது எந்தெந்த திகதிகள் என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
1. எண் 5 பிறந்தவர்கள்
எண் 5 வரும் திகதிகளில் பிறந்தவர்கள் நெகிழ்வுத்தன்மை கொண்டவர்களாக காணப்படுவார்கள். பார்க்கும் போது புதுமை மற்றும் உற்சாகத்துடன் இருப்பார்கள். காதல் திருமணங்கள் செய்ய அதிக விருப்பம் காட்டுவார்கள். இவர்களின் திருமணம் மகிழ்ச்சி கொடுக்கிறதோ இல்லையா? ஆனால் மன நிறைவுக் கொடுக்கும்.
2. எண் 6 பிறந்தவர்கள்
எண் 6 பிறந்தவர்கள் அதிக பொறுப்புள்ளவர்கள், குடும்ப நலன் சார்ந்தவர்களாக இருப்பார்கள். இவர்களிடம் உறவுகள் நல்லிணக்கத்துடன் நடந்து கொள்வார்கள். ஆழமான காதல் பிணைப்பு இருக்கும். திருமணம் குறித்து எந்தவித சந்தேகமுமின்றி காதல் திருமணம் செய்து கொள்ள முனைவார்கள்.
3. எண் 8 பிறந்தவர்கள்
எண் 8 பிறந்தவர்கள் சாதனை, அதிகாரம் மற்றும் செழிப்பு உள்ளிட்டவைகளுடன் இணைக்கப்பட்டவர்களாக காணப்படுவார்கள். தனித்தன்மை வாய்ந்தவர்களாக இருப்பார்கள். எப்போதும் அவர்களின் குறிக்கோள்கள் மற்றும் தொழில் போன்றவைகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். காதல் திருமணத்தை உறவுகள் சம்பதத்துடன் செய்து கொள்வார்கள். இவர்கள் காதலிப்பதை விட தனிப்பட்ட முன்னேற்றத்தில் அதிகமான அக்கறை காட்டுவார்கள்.