ஜோதிட சாஸ்திரத்தின் பிரகாரம் ஒருவர் பிறக்கும் ராசியானது அவர்களின் விசேட குணங்களிலும், எதிர்கால வாழ்க்கையிலும் பெருமளவில் ஆதிக்கம் செலுத்தும் என்று நம்பப்படுகின்றது.
அந்த வகையில் குறிப்பிட்ட சில ராசிகளில் பிறந்த பெண்கள் பெரும்பாலும் காதல் விடயங்களில் முழுமையாக நேர்மையுடன் இருக்க மாட்மார்களாம். அதற்காக அந்த ராசினர் ஏமாற்றுவார்கள் என்று அர்த்தம் கிடையாது.
மற்ற ராசிகளுடன் ஒப்பிடுகையில் அவர்கள் பெரும்பாலான நேரங்களில் தங்களின் நேர்மை குணத்தை காதல் விடயத்தில் தவறவிடுவதற்கான வாய்ப்புகள் அதிகம். இப்படிப்பட்ட பெண் ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மிதுனம்
மிதுன ராசியில் பிறந்த பெண்கள் இரட்டை இயல்புக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள். இயல்பாகவே வசீகரமான உடல் தோற்றத்தை கொண்டிருப்பார்கள்.
ஆனால்,தங்களின் உணர்வுகளை யாரிடமும் முழுமையாக வெளிப்படுத்த இவர்கள் தயக்கம் காட்டுவார்கள்.
இவர்கள் புதிய விடயங்களில் முயற்சி செய்வதில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக இருப்பதனால், ஒரே உறவில் சிக்கிக்கொள்வதை பெரிதும் விரும்புவதில்லை.
காதல் உறவில் அர்பணிப்புடன் செய்பட இவர்கள் அதிகம் போராடுகின்ற போதும் சில சமயம் இவர்களையே அறியாமல் காதலில் நேர்மையை இழக்க வேண்டிய சூழ்நிலைகளில் சிக்கிக்கொள்கின்றார்கள்.
இவர்கள் காதலில் அதிகம் ஆரம்பத்தில் இருந்த சிலிர்ப்பை விரும்புவார்கள். அது குறையும் போது இவர்களுக்கு அந்த உறவு சலிப்பை ஏற்படுத்துவதாக இருக்கும்.
மேஷம்
மேஷ ராசி பெண்கள் எப்போதும் உற்சாகமாக இருக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாக இருப்பார்கள். இவர்கள் உணர்ச்சிகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள்.
காதலில் விழும்போது, துணையின் மகிழ்ச்சிக்காக அதிகம் அர்ப்பணிப்புடன் செயற்படும் இவர்கள் அதே உறவில் இறுதிவரையில் நிலைப்பதற்கு அதிகம் போராட வேண்டியிருக்கும்.
இவர்கள் பெரும்பாலும் உறவில் ஆர்வம் குறையும் போது அந்த உறவில் இருந்து வெளியேறிடும் குணம் கொண்டவர்களாக இருப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்த பெண்கள் எப்போதும் தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என நினைப்பார்கள். இவர்கள் பிரதானமான இடத்தை வகிக்க வேண்டும் என்பதில் உறுதியாக இருப்பார்கள்.
தங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்காத உறவு காதலாக இருந்தாலும் அந்த உறவை இவர்கள் நீடிக்க விரும்பமாட்டார்கள்.
இவர்கள் காதலில் நம்பமுடியாத அளவிற்கு விசுவாசமாக இருப்பார்கள் என்றாலும், இவர்கள் முறையாக கவனிக்கப்படாத போதும் பராட்டப்படாத போதும் அந்த உறவில் இருந்து வெளியேற தயங்கவே மாட்டார்கள்.