குழந்தை தாயிடம் ஒன்று முதல் இரண்டு வயது வரை தாயிடமோ அல்லது செயற்கை பாலோ அருத்துவது முக்கியம். பால் ஒரு நிறையுணவாகும்.

இதில் வைட்டமின் ஏ, வைட்டமின் டி, வைட்டமின் பி12, கால்சியம் மற்றும் புரதம் போன்ற அத்தியாவசிய வைட்டமின்கள் மற்றும் தாதுக்கள் உள்ளன. ஆரோக்கியமான சருமத்தை பராமரிப்பதில் இந்த ஊட்டச்சத்துக்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன.

இதனால் தோல் செல் உற்பத்திக்கும், பராமரிப்புக்கும் பால் உதவுகிறது. ஆனால் குழந்தைகள் இதை நாள் முழுக்க எந்த உணவும் உண்ணாமல் குடிக்கும் போது உடலில் பல பிரச்சனைகள் உருவாகும் அது என்னென்ன பிரச்சனைகள் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

குழந்தைகள் தினமும் பால் குடித்தால் இந்த பிரச்சனைகள் வருமா? பெற்றோருக்கான அறிவுறுத்தல் | Much Milk Drink Babys Side Effects Tamilநீண்ட நேரத்திற்கு எந்த உணவும் உண்ணாமல் பால் மட்டும் குழந்தைகள் குடிப்பதால் அவர்களுக்கு இரும்புச்சத்து குறைபாடு ஏற்படுகிறது. இதற்கு காரணம் பாலில் காணப்படும் கேசீன் என்ற பால் புரதம் இது இரும்பு உறிஞ்சுதலைத் தடுக்கிறது. 

இந்த நோய் இது பால் இரத்த சோகை என்றும் அழைக்கப்படுகிறது. குழந்தைக்கு இந்த பிரச்சனை சோர்வு மற்றும் பலவீனத்தை ஏற்படுத்துகிறது. குழந்தை இரண்டு வயதாகிய பின்னும் பால் குடித்தால் அந்த குழந்தைக்கு மலச்சிக்கல் பிரச்சனை வர ஆரம்பிக்கிறது.

இதற்கு காரணம் அதிக பால் குடிக்கும் குழந்தைகளும் அடிக்கடி தண்ணீர் குறைவாக குடிக்கிறார்கள். அத்தகைய சூழ்நிலையில், குழந்தைகளும் ஒழுங்கற்ற குடல் இயக்கம் மற்றும் வலி போன்ற பிரச்சனைகளை சந்திக்க ஆரம்பிக்கின்றன. 

பால் குடிப்பதால் பசி வராது. இதனால் பல ஊட்டச்சத்துக்கள் அவர்களுக்கு குறைவாக இருக்கும்.எனவே ஒரு குழந்தை ஒன்று முதல் இரண்டு வயது வரை என்றால் ஒன்றே கால் கப் முதல் இரண்டு கப் பால் கொடுக்கலாம். 

இதை தவிர இரண்டு வயதிற்கு மேல் இருந்தால் ஒரு நாளைக்கு இரண்டு முதல் இரண்டரை கப் பால் மட்டுமே கொடுக்க வேண்டும். இதை விட குழந்தை பால் குடிக்கவில்லை என்றால் குழந்தைக்கு அத்தியாவசிய ஊட்டச்சத்து குறைபாடு வரும்.

குழந்தைகள் தினமும் பால் குடித்தால் இந்த பிரச்சனைகள் வருமா? பெற்றோருக்கான அறிவுறுத்தல் | Much Milk Drink Babys Side Effects Tamilஒரு வயதுக்கு மேல் இருந்தால், அவருக்கு 709 மில்லி பால் மட்டுமே கொடுக்க வேண்டும். இது தான் ஒரு குழந்தை பால் குடிப்பதற்கான அளவாகும். இதை பெற்றோர்கள் பின்பற்றி நடப்பது மிகவும் முக்கியமாகும்.