பொதுவாக காதலிப்பவர்கள் எப்போதும் நம் துணைக்கு உண்மையாக இருக்க வேண்டும் என்றே யோசிப்பார்கள்.
இவர்களின் இந்த நேர்மையான குணம் விலைமதிக்க முடியாதது.
மாறாக துரதிர்ஷ்டவசமாக இந்த அடிப்படை குணம் அரிய குணமாக மாறினால் உறவில் விரிசல் விழ ஆரம்பிக்கும்.
ஜோதிட சாஸ்திரத்தின் படி குறிப்பிட்ட சில ராசிக்காரர்கள் காதலில் நம்ப முடியாத அளவிற்கு நேர்மையாகவும் அர்ப்பணிப்பாகவும் இருப்பார்கள்.
அந்த வகையில் காதலில் எப்போதும் உண்மைத்தன்மையுடன் நடந்து கொள்ளும் ராசிக்காரர்கள் யார் யார் என்பதை பதிவில் பார்க்கலாம்.
1. ரிஷப ராசிக்காரர்கள்
ரிஷப ராசியில் பிறந்தவர்கள் காளை சின்னம் கொண்டவர்களாக காணப்படுவார்கள். இவர்களின் காதலில் எப்போதும் உண்மை இருக்கும். இவர்களிடம் அசைக்க முடியாத நம்பிக்கை இருக்கும். தன்னுடைய துணைக்காக எதை வேண்டுமென்றாலும் செய்வார்கள்.
நம்பிக்கையை உடைக்க முயற்சிக்கும் பொழுது அடிப்படையான அன்பில் மாற்றம் ஏற்பட வாய்ப்பு இருக்கிறது. துணையின் விசுவாசத்தை மதித்து நடக்கும் ஆற்றல் இந்த ராசிக்காரர்களுக்கு இருக்கிறது.
2. கடக ராசிக்காரர்கள்
அன்புக்குரியவர்கள் மீது அளவுக்கடந்த அன்பும், அர்ப்பணிப்பும் கொண்டவர்களாக கடக ராசிக்காரர்கள் இருப்பார்கள். இவர்கள் மற்றவர்கள் மீது அளவுக்கடந்த நம்பிக்கை கொண்டிருப்பார்கள்.
துணைக்கான விருப்பத்திற்கு எப்போதும் முன்னுரிமைக் கொடுப்பார்கள். மேலும், துணையின் தேவைகளை புரிந்து கொண்டு அதனை நிறைவேற்றி வைப்பார்கள்.
கடக ராசியில் பிறந்தவர்களை கரம்பிடிக்க நீங்கள் கொடுத்து வைத்திருக்க வேண்டும். உங்களை அவர்களின் கண்ணை போல் பார்த்து கொள்வார்கள்.
3. விருச்சிக ராசிக்காரர்கள்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் கடுமையான விசுவாசம் கொண்டவர்களாக பார்க்கப்படுகிறார். உறவை ஆன்மா சார்ந்து பாதுகாப்பார்கள். துணையின் விருப்பத்தில் அளவுக்கடந்த கவனம் கொள்வார்கள்.
இவர்களின் காதல் நிச்சயம் திருமணத்தில் தான் முடியும். அன்புக்குரியவர்களை கடுமையாகப் பாதுகாப்பார்கள். உறவில் இருந்தால் மற்றவர்களை திரும்பிக் கூட பார்க்க மாட்டார்கள்.
இந்த ராசியில் மாப்பிள்ளை கிடைத்தால் கண்ணை மூடிக் கொண்டு ஓகே சொல்லுங்கள். உங்களின் வாழ்க்கை செழிக்கும்.