பொதுவாக வேத ஜோதிடத்தின் படி, நவகிரகங்கள் ஒவ்வொன்றும் அவ்வப்போது ராசியை மாற்றி பயணிக்கும்.

இதனால் சில ராசிகளுக்கு சுபமும் சில ராசிகளுக்கு அசுப யோகமும் உருவாகும். அப்படி உருவாகும் யோகங்களின் தாக்கம் அனைத்து ராசிகளிலும் இருக்கும்.

அந்த வகையில் 2024 ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் சூரியன் மகர ராசிக்குள் நுழைகிறார். இதனை தொடர்ந்து சுக்கிரனும், செவ்வாயும் மகர ராசியில் நுழையும்.

இந்த பெயர்ச்சியால் மகர ராசியில் 3 கிரகங்களின் சேர்க்கையால் திரிகிரக யோகம் உருவாகவுள்ளது. பொதுவாக திரிகிரக யோகமானது 10 ஆண்டுகளுக்கு பின் நிகழ்கிறது.

10 ஆண்டுகளுக்கு பின் மகரத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: அதிஷ்ட கதவு திறக்க போகும் 3 ராசிகள் | Trigraha Yoga 2024 Zodiac Signs In Tamilஇந்த யோகம் மங்களகரமான யோகம் மற்றும் இதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்படும் என ஜோதிடர்கள் கூறுவார்கள்.

அந்த வகையில், திரிகிரக யோக மாற்றத்தால் யார் யாருக்கு அதிஷ்டம் கிட்டவுள்ளது என்பதனை தொடர்ந்து பார்க்கலாம்.

1. மகரம்

மகர ராசியில் புத்தாண்டில் உருவாகவுள்ள திரிகிரக யோகம் நற்செய்திகளை கொடுக்கவுள்ளது. இதனால் பணிபுரிபவர்களுக்கும், வணிகர்களுக்கும் இக்காலம் பிரகாசமாக இருக்கும்.

பணம், தொழில் இவை இரண்டிலும் நல்ல லாபம் கிடைக்கும். வேலை தேடிக் கொண்டிருப்பவர்களுக்கு நினைத்த வேலை கிடைப்பதற்கு வாய்ப்பு இருக்கின்றது. நீண்ட நாட்கள் திருமணமாகாமல் இருக்கும் தம்பதிகள் புத்தாண்டில் சுபச் செய்தி வீடு தேடி வரும்.

10 ஆண்டுகளுக்கு பின் மகரத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: அதிஷ்ட கதவு திறக்க போகும் 3 ராசிகள் | Trigraha Yoga 2024 Zodiac Signs In Tamil

2. துலாம்

இந்த ராசியில் 4 ஆவது வீட்டில் திரிகிரக யோகமானது உருவாகவுள்ளது. அத்துடன் புதிய சொத்துக்கள் வாங்குவதற்கான வாய்ப்பு இருக்கின்றது. ஆடம்பரமான பொருட்களை வாங்கி மகிழ்வீர்கள்.

வேலை மற்றும் வியாபாரத்தில் நல்ல முன்னேற்றம் ஏற்படும். தாயுடனான உறவு நன்றாக இருக்கும். வருமானத்தில்உயர்வு ஏற்படும். மேலும் புதிய வருமானத்திற்கான வாய்ப்பு அதிகரிக்கும். சமூகத்தில் மரியாதையும், கௌரவமும் அதிகரிக்கும்.

10 ஆண்டுகளுக்கு பின் மகரத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: அதிஷ்ட கதவு திறக்க போகும் 3 ராசிகள் | Trigraha Yoga 2024 Zodiac Signs In Tamil

3.ரிஷபம்

திரிகிரக யோகமானது, ரிஷப ராசியில் 9 ஆவது வீட்டில் உருவாகவுள்ளது. இதனால் ரிஷப ராசிக்காரர்களின் அதிர்ஷ்ட கதவு திறக்கும். முக்கிய வேலைகள் செய்து முடிக்கப்படும்.

நண்பர்கள், குடும்பம் என பிஸியாக இருப்பீர்கள், கோயில் செல்ல வேண்டும் என நினைத்த நீண்ட நாள் கனவு நினைவாகும். வெளிநாட்டில் படிக்க விரும்பும் மாணவர்களுக்கு அதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஆன்மீகத்தில் நாட்டம் அதிகரிக்கும். தெய்வீக பணிகளுக்காக அதிகமாக பணம் செலவு செய்ய வேண்டிய தேவை இருக்கும்.   

10 ஆண்டுகளுக்கு பின் மகரத்தில் உருவாகும் திரிகிரக யோகம்: அதிஷ்ட கதவு திறக்க போகும் 3 ராசிகள் | Trigraha Yoga 2024 Zodiac Signs In Tamil