பொதுவாகவே பெண்களுக்கு மாதவிடாய் சுழற்சி சராசரியாக 28 நாட்களுக்கு ஒரு முறை நிகழும் .அதன் போது பெண்கள் உடல், உள ரீதியாக பல்வேறு மாற்றங்களை சந்திக்க நேரிடும் என்பது அனைவரும் அறிந்ததே. முன்னைய காலங்களில் மாதவிடாய் நேரத்தில் பெண்கள் வீட்டில் ஒதுக்கி வைக்கப்படுது வழக்கம்.

மேலும் இந்த நேரங்களில் கோவிலுக்கு செல்வதும் பூஜை பொருட்களை தொடுவதும், சமையல் அறைக்குள் செல்வதும் கூட மறுக்கப்பட்டிருந்தது. இதற்கு காரணம் பெண்களை அடிமைப்படுத்துவதற்காக என பலரும் நினைத்துக்கொண்டிருக்கின்றார்கள்.

ஆனால் மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஒதுக்கி வைக்கப்பட்டதன் அறிவியல் ரீதியான காரணங்கள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக சாதாரண நேரங்களை விட மாதவிடாய் காலங்களில் பெண்களின் உடல் மிகவும் உஷ்ணமாக இருப்பதுடன் நோய் எதிர்ப்பு சக்தியும் மிகவும் குறைவாக இருக்கும். 

மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஏன் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள்? உண்மை இது தான் | Why Is Pooja Not Allowed During Periods

மாதவிடாய் நேரத்தில் உடல் வெப்பம் மிகவும் அதிகமாக இருப்பதால் இவர்கள் இந்த நேரத்தில் குறிபிட்ட சில  பொருட்களை தொட்டால் அது விரைவில் பழுதடைய கூடும். குறிப்பாக பழங்கள் காய்கறிகள் என்பன கெட்டுபோகும் என்பதால் தான் முன்னோர்கள் மதவிடாயின் போது பெண்கள் சமையல் அறைகுள் வரக்கூடாது என கூறினார்கள். 

மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஏன் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள்? உண்மை இது தான் | Why Is Pooja Not Allowed During Periods

மேலும் மாதவிடாய் நேரத்தில்  நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளதால் யாரையும் தொடாமல் தனியாக இருப்பது சிறந்தது. இந்த நேரத்தில் மற்றவர்களுடன் நெருங்கி பழகினால் அவர்களிடம் இருந்து நோய் தொற்றுக்கள் எளிமையாக பரவக்கூடும். இதன் காரணமாகவே பெண்கள் தனிமையில் இருக்க வேண்டும் என கூறினார்கள். 

மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஏன் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள்? உண்மை இது தான் | Why Is Pooja Not Allowed During Periods

அதுமட்டுமன்றி முன்னைய காலங்களில்  பெண்களுக்கு மாதவிடாயில் எற்படும் இரத்த கசிவை கட்டுப்படுத்த போதியளவாக ஆடை வசதி இருக்கவில்லை.  தாங்கள் சாதாரணமாக பயன்னடுத்தும் புடவையின் துணியையே பயன்படுத்தினார்கள். அது அவ்வளவு பாதுகாப்பானதாகவும் சௌகரியமானதாகவும்  இருக்கவில்லை. 

இதன் காரணமாகவே வெளியே செல்ல வேண்டாம் எனவும் குறிப்பாக கோவில் போன்ற பொது இடங்களுக்கும் செல்ல வேண்டாம் என்றும் கூறினார்கள்.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஏன் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள்? உண்மை இது தான் | Why Is Pooja Not Allowed During Periods

கோவிலுக்கு மட்டும் செல்ல வேண்டாம் என கூறப்படவில்லை. பொது இடங்களுக்கு செல்ல வேண்டாம் என பெண்களின் பாதுகாப்பு கருதியே சொல்லப்பட்டது. 

அறிவியல் ரீதியில் மாதவிடாய் நாட்களில் நமது உடலில் உள்ள சக்கரங்கலேல்லாம் கீழ் நோக்கி செயல்படும். அதனால் புவி ஈர்ப்புவிசையால் ஈர்க்கப்பட்டு இரத்த போக்கு அதிகமாகும் வாய்ப்பு காணப்படுவதால் இந்த நேரத்தில் பெண்களுக்கு  ஓய்வு மிகவும் அவசியம். அதனால் தான் பெண்கள் தனிமைப்படுத்தப்பட்டார்கள்.

மாதவிடாய் காலத்தில் பெண்கள் ஏன் ஒதுக்கி வைக்கப்பட்டார்கள்? உண்மை இது தான் | Why Is Pooja Not Allowed During Periods

இந்த விடயம் குறித்து புரிந்துக்கொள்ள வேண்டியது அவசியம். இதை நாம் மரபு ரீதியாகவும், விஞ்ஞான ரீதியாகவும் பார்க்க வேண்டுமே தவிர பெண்ணை அடிமைபடுத்துதல், ஒதுக்குதல், ஆண் ஆதிக்கம் என்ற பார்வையில் பார்ப்பதை முற்றாக தவிர்த்து இதன் உண்மை காரணத்தின் மீது கவனத்தை திசைத்திருப்ப வேண்டும்.