தனது புதுமனைவி இந்துவுக்காக சமையல் செய்து கொடுத்து அசத்தி இருக்கிறார் நடிகர் பிரேம்ஜி.
பாடகர், இசையமைப்பாளர், நடிகர் எனப் பன்முகம் கொண்டவர் பிரேம்ஜி. இவருக்கும் சேலத்தை சேர்ந்த வங்கி ஊழியரான இந்து என்பவருக்கும் இந்த மாத தொடக்கத்தில் திருத்தணியில் திருமணம் நடந்தது. மணமக்களின் புகைப்படங்களும் இணையத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது.
இப்போது தனது புதுமனைவிக்காக சமையல் செய்து கொடுத்து அசத்தி இருக்கிறார் பிரேம்ஜி. இதனை வீடியோ எடுத்து, ‘இதை விட வேறு என்ன எனக்கு வேண்டும்?’ என்ற கேப்ஷனோடும், ‘ஒரு காலத்துல இவரு எப்படி இருந்தவரு தெரியுமா?’ என்ற ‘பாட்ஷா’ பட வசனத்தோடும் குறும்புடன் பகிர்ந்திருக்கிறார் இந்து.