கேடி பில்லா கில்லாடி ரங்கா, மாநகரம் போன்ற படங்களின் மூலம் பிரபலமானவர் ரெஜினா கசாண்ட்ரா. தற்போது கன்னடம், தெலுங்கு என தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகையாக இருக்கிறார். தற்போது கார்த்திக் ராஜு இயக்கிய சூர்ப்பனகை என்ற படத்தில் நடித்து வருகிறார். ரெஜினா எப்போதும் உடலை கட்டுக்கோப்பாக பராமரித்துவருபவர். அதனால் சுறுசுறுப்பாக உடற்பயிற்சிகளில் ஈடுபட்டு வருவார்.

 

ரெஜினா

 

குறிப்பாக சர்பிங்க் விளையாட்டில் மிகுந்த ஆர்வம் கொண்டவர். சமீபத்தில் ரெஜினா படகு சவாரி செய்த புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. “என்னைப் போலவே, நீங்கள் சென்னையில் வாழ்ந்தால் செட்பேட்டோகோபார்க்கின் நடுவில் உள்ள இந்த சிறிய அழகான தீவு உங்களை கவர்ந்திருக்கும். நான் சிறியவளாக இருந்த போதே இங்கு வரவேண்டும் என்று ஆசைப்படுவேன். தற்போது அந்த ஆசை நிறைவேறியது மட்டுமல்லாமல் நான் உடற்பயிற்சி செய்யவும் உதவிகரமாக உள்ளது. என்னால் முடிந்தவரை இங்கு பயிற்சி பெறப் போகிறேன்.” என்றும் தெரிவித்துள்ளார்.