தமிழ் சின்னத்திரையில் உலக நாயகன் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி வரும் நிகழ்ச்சி பிக் பாஸ். இதுவரை மூன்று சீசன்கள் முடிவடைந்துள்ள இந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன் வெகு விரைவில் தொடங்க உள்ளது.
இந்த நிகழ்ச்சி அக்டோபர் நான்காம் தேதி முதல் ஒளிபரப்பாக தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த நிகழ்ச்சியின் போட்டியாளர்களாக யார் யார் பங்கேற்பார்கள் எனவும் சிலரின் பெயர்கள் அடிபட்டு வருகிறது.
இந்த நிலையில் தற்போது உலக நாயகன் கமல்ஹாசனின் சாய்ஸாக கடாரம் கொண்டான் படத்தில் தன்னுடைய மகள் அக்ஷரா ஹாசன் ஜோடியாக நடித்த அபிஹாசன் பிக் பாஸ் சீசன் 4-இல் கலந்து கொள்ள இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
மேலும் இவரை டைட்டில் வின்னராக்கவும் வாய்ப்பு இருப்பதாக பேசப்பட்டு வருகிறது. முதல் சீசனில் ஆரவ், ஹரிஷ் கல்யாண் இரண்டாவது சீசனில் மஹத் மூன்றாவது சீசனில் கவின், முகேன் போன்று நான்காவது சீசனில் பெண்களை கவரும் நபராக அபிஹாசன் இருப்பார் என எதிர்பார்க்கலாம்.