தமிழ் சினிமாவின் எவர் கீரின் நடிகையாக வலம் வருகிறார் நடிகை த்ரிஷா. 40 வயதிலும் கனவு கன்னியாக இருந்து வருகிறார். அண்மையில் விஜய்யுடன் லியோ படத்தில் நடித்து முடித்துள்ளார்.
ஹிந்தியில் எண்ட்ரி கொடுக்கவுள்ளார். சம்பளத்தையும் தாறுமாறாக ஏற்றிவிட்டதாக கூறப்படுகிறது. தற்போது வரை திருமணம் செய்து கொள்ளாமல், தனது நடிப்பில் கவனம் செலுத்தி வருகிறார்.
இந்நிலையில், முன்னதாக இயக்குனர் ராஜமௌலி 2010-ஆம் ஆண்டு காமெடி நடிகர் சுனிலை கதாநாயகனாக வைத்து இயக்கிய திரைப்படம் (Maryada Ramanna) மர்யதா ராமண்ணா. இந்தப் படத்தில் நடிகை த்ரிஷாவை நடிக்க வைக்க முடிவு செய்து அவரை அணுகியுள்ளார்.
ஸ்டார் நடிகர்களுக்கு ஜோடி போட்டுவந்த த்ரிஷா, ஹீரோ சுனில் என்றதும், அந்த படத்தில் நடிக்க மறுப்பு தெரிவித்துள்ளார். ஆனால், அந்தப் படம் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
12 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்டு சுமார் 40 கோடி வசூலை அள்ளியது. த்ரிஷா இந்த வாய்ப்பை மறுத்த பின்னர், அறிமுக நடிகையான சலோனி இந்தப் படத்தில் நடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.