தமிழ் சினிமாவில் பல காமெடி திரைப்படங்கள் வந்திருந்தாலும் அறிமுக நடிகர்கள் இணைந்து நடிக்கும் காமெடி திரைப்படங்கள் வரலாற்றில் இடம் பிடிக்கின்றன என்றே கூறலாம். அதிலும் குறிப்பாக கிராமத்து கதைக்களத்தை கொண்ட திரைப்படங்கள் பெரும் வெற்றி பெறுகின்றன.
அவ்வாறே சிவகார்த்திகேயன் , சூரி இணைந்து நடித்த "வருத்தப்படாத வாலிப சங்கம்" மற்றும் சூரி, விமல் இணைந்து நடித்த "களவாணி" போன்ற திரைப்படங்களை கூறலாம். இவ்வாறு காமெடியில் பிச்சு உதறும் இவர்கள் மூவரும் இணைந்து நடித்த திரைப்படமே "கேடி பில்லா கில்லாடி ரங்கா" ஆகும்.
சிவகார்த்திகேயன் ,விமல் ,சூரி ஆகிய மூவரும் இணைந்து நடித்து பாண்டிராஜ் இயக்கத்தில் வெளியான அசத்தலான காமடி திரைப்படமான "கேடிபில்லா கில்லாடி ரங்கா" வசூல் ரீதியாகவும், விமர்சன ரீதியாகவும் வெற்றி பெற்றிருந்தது. இந்த நிலையில் இந்த படத்தில் நடித்த சிவகார்த்திகேயன் ,விமல்,சூரி மற்றும் சதீஸ் ஆகியோர் இணைந்து எடுத்த புகைப்படத்தை வெளியிட்டுள்ளனர்.
இது சமூக வலைத்தளங்கலில் வைரலாகி வருகிறது. அது மட்டும் இன்றி இவர்கள் இணைந்து கேடிபில்லா கில்லாடி ரங்கா பாகம் இரண்டை நடிக்க போவதாகவும் இவருடன் சதீசும் இணையப்போவதாகவும் பல போலித்தகவல்களும் பரவி வருகின்றது. இந்நிலையில் நடிகர் சூரி, சிவகார்த்திகேயன்,விமல்,சதீஷ் ஆகியோர் எடுத்துக்கொண்ட புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது.