மூளையில் கட்டி ஏற்பட்டதன் காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த பிரபல ஹாலிவுட் நடிகர் சாம் லாய்ட் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். பிரபல ஹாலிவுட் நடிகர் சாம் லாய்ட். இவர் ரைசிங் சன், ஸ்கோர்சர், சூப்பர் காபெர்ஸ், பேக் மை மிட் நைட், எக்ஸ் டெர்மினேட்டர்ஸ் உள்பட பல படங்களில் நடித்துள்ளார். கோச், ஸ்பின் சிட்டி, டபுள் ரஷ் உள்ளிட்ட பிரபலமான தொலைக்காட்சி தொடர்களிலும் இவர் நடித்து இருக்கிறார். சாம் லாய்ட்டுக்கு திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டது. மருத்துவ பரிசோதனையில் அவருக்கு மூளையில் கட்டி இருப்பது தெரியவந்தது. இதற்காக அவர் ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்தார். இந்த நிலையில் சிகிச்சை பலனின்றி சாம் லாய்ட் மரணம் அடைந்தார். அவருக்கு வயது 56. மறைந்த சாம் லாயிட்டுக்கு வனேஸ்ஸா என்ற மனைவியும், வெஸ்டன் என்ற மகனும் உள்ளனர். இவர் பிரபல ஹாலிவுட் நடிகர் கிறிஸ்டோபர் லாயிடின் மருமகன் என்பது குறிப்பிடத்தக்கது. சாம் லாய்ட்டின் மறைவுக்கு ஹாலிவுட் நடிகர்-நடிகைகள் பலரும் இரங்கல் தெரிவித்து உள்ளனர்.
பிரபல ஹாலிவுட் நடிகர் சாம் லாய்ட் மரணம்
- Master Admin
- 04 May 2020
- (641)
தொடர்புடைய செய்திகள்
- 04 May 2020
- (716)
அவர் கோலிவுட்டின் மாஸ்டர், மற்றொருவர் ஹே...
- 04 May 2020
- (756)
என் கணவரை விட அந்த பெண் டாமினேட் செய்கிற...
- 12 August 2026
- (171)
இந்தியாவில் அதிகம் வசூல் செய்த டாப் 10 ஹ...
யாழ் ஓசை செய்திகள்
நாட்டில் ஆண்களுக்கு இடையில் எச்.ஐ.வி தொற்று அதிகரிப்பு
- 14 October 2026
16 வயது சிறுமியிடம் அத்துமீறிய ரோபோ!
- 14 October 2026
அனோஜனின் மரண தண்டனையை ரத்து செய்தது சவூதி உயர் நீதிமன்றம்
- 14 October 2026
லைப்ஸ்டைல் செய்திகள்
சினிமா செய்திகள்
பாக்ஸ் ஆபிஸ்: டோரதி திரைப்படம் இதுவரை உலகளவில் செய்துள்ள வசூல்
- 14 October 2026
Amala Paul’s Stunning Latest Clicks 📸👀
- 29 September 2026
Rashmika Mandanna’s Hottest Black Look🖤🔥
- 23 September 2026
முதன்மை செய்திகள்
Subscribe our Newsletter!
Subscribe to our email newsletter to receive useful articles and special offers.
