பிரேஸிலில் கடந்த 24 மணித்தியாலத்தில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) தொற்றினால் 23,674பேர் பாதிக்கப்பட்டுள்ளதோடு, 729பேர் உயிரிழந்துள்ளதாக சுகாதார அமைச்சின் புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.
இதன்படி, அங்கு 8 இலட்சத்து 91 ஆயிரத்து 556பேர் மொத்தமாக வைரஸ் தொற்றுக்கு இலக்காகியுள்ளனர். அத்துடன் 44 ஆயிரத்து 118பேர் உயிரிழந்துள்ளனர்.
மேலும், 393,870பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். 453,568பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். 8,318பேரின் நிலைக் கவலைக்கிடமாக உள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால் மிக்பெரிய பாதிப்பை எதிர்கொண்ட இரண்டாவது நாடாக விளங்கும் பிரேஸில், அதிக உயிரிழப்பை எதிர்கொண்ட இரண்டாவது நாடாகவும் மாறியுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றினால் கடுமையான இழப்பினை எதிர்கொண்ட அமெரிக்காவை விட தினசரி பாதிப்பில், பிரேஸில் உச்சத்தை தொட்டுள்ளது.