உலகில் அதிக சம்பளம் பெறும் பிரபலங்களின் பட்டியலை ஃபோர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள 100 பிரபலங்களில் ‘2.0’ நடிகர் அக்சய்குமார் 52வது இடத்தில் இடம்பெற்றுள்ளார்.

கடந்த 2019-ம் ஆண்டு ஜூன் முதல் 2020-ம் ஆண்டு மே வரையில் உலகில் அதிக சம்பளம் பெரும் பிரபலங்கள் பட்டியலை போர்ப்ஸ் நிறுவனம் வெளியிட்டுள்ளது. இந்த பட்டியலில் கெய்லி ஜென்னர், கென்யா வெஸ்ட், ரோஜர் பெடரர், கிறிஸ்டினோ ரொனால்டோ, மெஸ்ஸி ஆகியோர் முதல் ஐந்து இடங்களில் உள்ளனர்.

மேலும் இந்த பட்டியலில் ‘பாஸ்ட் அண்ட் பியூரியஸ்’ புகழ் வின் டீசல் 40வது இடத்திலும், பாலிவுட் நடிகர் அக்சய்குமார் 52வது இடத்திலும், ஜெனிபர் லோபஸ் 56வது இடத்திலும், வில்ஸ்மித் 69வது இடத்திலும், ஜாக்கிசான் 80வது இடத்திலும், லேடி காகா 87வது இடத்திலும், செரீனா வில்லியம்ஸ் 98வது இடத்திலும், ஏஞ்சலினா ஜோல்லி 99வது இடத்திலும் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது