சாணக்கியர் பண்டைய இந்தியாவின் ஒரு பிரபலமான தத்துவஞானியாவார். சாணக்கியரின் கொள்கைகள், வாழ்க்கையில் சரியான பாதையில் செல்ல மக்களைத் தூண்டுவதாகும். அவர் ஒரு சிறந்த இராஜதந்திரியாகவும் மற்றும் அரசியலில் நிபுணராகவும் கருதப்படுகிறார். அவர் தரும் ஆலோசனைகளைப் பயன்படுத்தி மக்கள் தங்கள் வாழ்க்கையை மகிழ்ச்சியாக மாற்றலாம். சாணக்கியர் தனது சாணக்கிய நீதியில் ஒருவரின் வாழ்க்கையை அழிக்கும் சில பழக்கங்களைப் பற்றி குறிப்பிட்டுள்ளார்.
சாணக்கிய நீதியின் படி இந்த பழக்கவழக்கங்களால் ஒருவர் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சாணக்கியர் கூற்றுப்படி, ஒருவர் இந்த பழக்கங்களை கைவிட்டால் அவர் வாழ்க்கையில் அதிக இழப்புகளை சந்திக்க மாட்டார். அந்த பழக்கங்கள் என்னென்ன என்று இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.
தகுதிக்கு மீறி செலவு செய்வது
சாணக்கிய நீதியில் கூறியுள்ளபடி, ஒருவர் தன்னுடைய தகுதிக்கு மீறி அதிகமாக பணம் செலவழிக்கக்கூடாது. வருமானத்தை விட அதிகமாக செலவு செய்பவர் வாழ்க்கையில் பல பிரச்சனைகளை சந்திக்க நேரிடும். சிந்திக்காமல் பணத்தைச் செலவழிக்கும் பழக்கத்தால் ஒருவருக்கு வாழ்க்கையில் எப்போதும் பணப்பிரச்சினை இருக்கும். அதன் காரணமாக அவர்கள் வேறு பல பிரச்சினைகளை சந்திக்க வேண்டியிருக்கும். பணம் இல்லாதவர்கள் வாழ்க்கையில் எப்போதும் மகிழ்ச்சியற்ற வாழ்க்கையை வாழ முடியாது.
பலவீனத்தை பகிர்ந்து கொள்பவர்கள்
உங்கள் பலவீனத்தை யாரிடமும் சொல்லக்கூடாது என்று சாணக்கிய கூறுகிறார். கவலையில் இருக்கும் ஒரு நபர் தனது பலவீனத்தை தனது நண்பர், உடன் படித்தவர்கள் அல்லது சக ஊழியர்களிடம் பகிர்ந்து கொள்கிறார்கள். அதனால் பலர் அந்த பலவீனத்தைப் பயன்படுத்திக் கொள்கிறார்கள், அதனால் எதிர்காலத்தில் நீங்கள் மகிழ்ச்சியற்ற நிலையைச் சந்திக்க வேண்டியிருக்கும்.
மற்றவர்களுடன் ஒப்பிட்டு பார்ப்பவர்கள்
சாணக்கியரின் கூற்றுப்படி, பாகுபாடு காட்டுபவர் ஒருபோதும் மகிழ்ச்சியாக இருக்க முடியாது. தன்னை மற்றவர்களுடன் ஒப்பிட்டுப் பார்ப்பவர்கள் வாழ்க்கையில் ஒருபோதும் எந்த விஷயத்திலும் திருப்தி அடைய மாட்டார்கள். எப்பொழுதும் அதிகமாக ஆசைப்பட்டு தங்கள் வாழ்க்கையையே அழித்துக் கொள்வார்கள்.
சோம்பேறித்தனம்
சோம்பேறித்தனம் வாழ்க்கையில் வெற்றி பெற நினைக்கும் எவருக்கும் மிகப்பெரிய எதிரியாகும். சோம்பேறிக்கு வாழ்க்கையில் எப்போதும் வெற்றி கிடைக்காது என்கிறார் ஆச்சார்ய சாணக்கியர். அத்தகைய நபர் எப்போதும் தனது வேலையை நாளை செய்து கொள்ளலாம் என்று ஒத்திவைப்பார். அதனால் அவர்கள் வாழ்க்கையில் பல சிரமங்களை சந்திக்க நேரிடும். அதனால் அவர் எப்போதும் சோகமாகவே இருப்பார். வாழ்க்கையில் வெற்றியை அனுபவிக்க ஒருவர் செய்ய கொண்டிருக்க வேண்டிய சில விஷயங்களை மேற்கொண்டு பார்க்கலாம்.
பொறுமை
பொறுமையின் காரணமாக ஒருவர் வாழ்க்கையில் சந்திக்கும் மிகவும் கடினமான நேரங்களைக் கூட எளிதில் சமாளிக்க முடியும் என்று சாணக்கியர் கூறுகிறார். வாழ்க்கையில் எதுவுமே நிரந்தரம் இல்லை. எனவே ஒரு நபர் எப்போதும் தனது நிகழ்காலத்தை மேம்படுத்தவும், அந்த தருணத்தை அனுபவிக்கவும் முயற்சிக்க வேண்டும்.
பணம்
வாழ்க்கையின் துன்பமான காலகட்டங்களில் பணம் ஒரு நபரைப் பாதுகாக்கும் என்று சாணக்கியர் நம்புகிறார். எனவே ஒவ்வொருவரும் பணத்தைச் சேமிக்கும் பழக்கத்தைக் கொண்டிருக்க வேண்டும். சம்பாதிக்கும் பணத்தை சேமிக்கும் பழக்கம் உள்ளவர்கள் கடினமான காலகட்டத்தை எளிதில் சமாளிக்கலாம் என்கிறார் சாணக்கியர்.
முடிவெடுக்கும் திறன்
சாணக்கிய நீதியின் படி, பாதகமான சூழ்நிலைகளில் சரியான முடிவுகளை எடுக்கும் திறன் ஒருவருக்கு இருக்க வேண்டும். அவசரமாகவோ அல்லது மனக்கிளர்ச்சியுடனோ எடுக்கும் முடிவுகள் சில நேரங்களில் உங்களுக்கு தீங்கு விளைவிக்கும்.