இலங்கையில் இறக்குமதி செய்யப்பட்ட நிலையில் புற்றுநோயை ஏற்படுத்தும் என சர்ச்சைக்குள்ளான தேங்காய் எண்ணெய் மீளவும் ஏற்றுமதி செய்யப்படவுள்ளதாக சுங்கப்பிரிவு தெரிவித்துள்ளது.
இதன்படி புற்றுநோயை ஏற்படுத்தும் Aflatoxin இரசாயன பதார்த்தம் அடங்கிய 6 தேங்காய் எண்ணெய் கொள்கலன்கள் எதிர்வரும் 13ஆம் திகதி மீள் ஏற்றுமதி செய்யப்படவுள்ளது.
இவை மலேசியாவிற்கு அனுப்பப்பட உள்ளதாக சுங்கப் பிரிவின் ஊடகப் பேச்சாளர் குறிப்பிட்டுள்ளார்.
105 மெற்றிக் தொன் நிறையுடைய குறித்த தேங்காய் எண்ணெய் தொகை மீள ஏற்றுமதி செய்வதற்காக நேற்று மாலை கொழும்பு துறைமுகத்தின் வெளியேற்றும் முனையத்திற்குக் கொண்டு செல்லப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நிலையில் அதனை மீள் ஏற்றுமதி செய்வதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக சுங்க ஊடகப் பேச்சாளர் மேலும் தெரிவித்துள்ளார்.