தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்புகளுக்கான பள்ளிகளை மூட வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை உத்தரவிட்டுள்ளது.

மார்ச் 22ம் திகதி முதல் மறுஉத்தரவு வரும் வரை தமிழகத்தில் தமிழகத்தில் 9, 10, 11ம் வகுப்புகளுக்கான பள்ளிகளை மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் மீண்டும் அதிகரிப்பதை தொடர்ந்தே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

9, 10, 11ம் வகுப்புகளுக்கான விடுதிகளையும் மூட உத்தரவிடப்பட்டுள்ளது. எனினும், 9, 10, 11ம் வகுப்புகளுக்கான வகுப்புகள் அன்லைனில் தொடரலாம் என வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை தெரிவித்துள்ளது.

12ம் வகுப்பு மாணவர்களுக்கு தொடர்ந்து வகுப்புகள் நடக்கும் என விளக்கமளிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநில ஆணையத்தை தவிர மற்ற ஆணையங்களுக்கான 10 ஆம் வகுப்புக்கான பொதுத் தேர்வை அந்த ஆணையங்கள் திட்டமிட்டபடி நடத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

மேலும், திட்டமிட்டபடி 10 ஆம் வகுப்புக்கான மேற்கண்ட ஆணையத் தேர்வில் கலந்து கொள்ளும் மாணவர்களுக்கு சிறப்பு வகுப்புகள் மற்றும் அந்த மாணவர்களுக்கான விடுதிகளின் செயல்பாடு அனுமதிக்கப்படும் என தமிழ்நாடு அரசு தெரிவத்துள்ளது.