ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் ஒருவர் பிறக்கும் ராசிக்கும் அவரின் தனிப்பட்ட ஆளுமை மற்றும் எதிர்கால வாழ்க்கை ஆகியவற்றுக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு காணப்படுகின்றது.
அந்தவகையில் குறிப்பிட்ட சில ராசியில் பிறந்த ஆண்களும் சரி பெண்களும் சரி மிகவும் தைரியமானவர்களாகவும் சிங்கம் போல் வலிமையுடையவர்களாகவும் இருப்பார்கள். இவர்களை பார்க்கும் போதே மற்றவர்களுக்கு பயம் தோன்றும்.
அப்படி மன தைரியமும் உடல் வலிமையும் கொண்ட ராசியினர் யார் யார் என இந்த பதிவில் பார்க்கலாம்.
மேஷம்
மேஷ ராசியில் பிறந்ததவர்களுக்கு இயல்பாகவே தலைமைத்துவ பண்புகள் காணப்படும். இவர்களின் மன உறுதியும் ஆற்றலும் பார்ப்பவர்களை மெய் சிலிர்க்க வைக்கும். இவர்கள் எந்த விடயத்தை ஆரம்பித்தாலும் அதில் வெற்றியடையாமல் ஓய மாட்டார்கள். அந்தளவிற்கு மனவலிமை கொண்டவர்களாக இருப்பார்கள்.
சிம்மம்
சிம்ம ராசியில் பிறந்தவர்கள் சூரியனால் ஆளப்படுகின்றார்கள் இதனால் இவர்களுக்கு மற்றவர்களை ஈர்க்கும் தன்மையும் தலைமைத்துவ குணமும் இயற்கையிலேயே அமைந்திருக்கும். இவர்கள் சிங்கத்தை போல் எந்த விடயத்துக்கும் பயப்படவே மாட்டார்கள். போராடி வெற்றியடையும் தன்மை இவர்களுக்கு அதிகமாக இருக்கும். இவர்கள் துணிச்சலுக்கு பெயர் பெற்றவர்களாக இருப்பார்கள்.
விருச்சிகம்
விருச்சிக ராசியில் பிறந்தவர்கள் மாற்றத்தின் கிரகமான புளூட்டோவால் ஆளப்படுகின்றார்கள்.இவர்கள் மிகவும் துணிச்சல் நிறைந்தவர்காளாக இருப்பார்கள். இவர்கள் யாருக்கும் இலகுவில் கட்டுப்பட மாட்டார்கள். இவர்களை பயமுறுத்துவது சாத்தியமற்றதாக இருக்கும்.இவர்கள் இலக்குகளை நோக்கி மனவலிமையுடன் முன்னேறிச்செல்வார்கள்.