பண்டைய காலத்தில் இந்தியாவின் சிறந்த ஆசிரியர், தத்துவஞானி மற்றும் அரச ஆலோசகர் என பன்முக கொண்டு சிறந்து விளங்கியவர் தான் சாணக்கியர்.
இவர் “கௌடில்யர்” என்ற பெயராலும் அழைக்கப்பட்டார்.
சாணக்கியர் வாழ்ந்த காலப்பகுதியில் வாழ்க்கை, வெற்றி பற்றிய மதிப்புமிக்க பல கொள்கைகள் உருவாக்கியிருக்கிறார். இவைகளையே அறிவுரைகளாக தொகுத்து இன்று மக்கள் சாணக்கிய நீதி என படித்து கொண்டிருக்கின்றனர்.
அந்த வகையில், தம்பதிகளாக இருப்பவர்கள் சில விஷயங்களை ஒற்றுமையாக இருந்தால் வாழ்க்கையில் சீக்கிரம் வெற்றிப் பெறுவார்கள் என சாணக்கியர் கூறியுள்ளார்.
அப்படி என்னென்ன விடயங்களில் கவனம் செலுத்த வேண்டும் என தொடர்ந்து பதிவில் பார்க்கலாம்.
1. கணவன் - மனைவி உறவில் இருக்கும் பொழுது ஒருவரை ஒருவர் மதிக்க வேண்டும். சிறியவர்கள், பெரியவர்கள் என்று ஒன்று தம்பதிகளுக்கு மத்தியில் அல்ல. தம்பதிகளுக்கு இடையே உள்ள மரியாதை தான் அவர்களின் உறவை பலப்படுத்தும். முதலில் இதை செய்தாலே போதும்.
2. வெற்றிகரமான திருமண வாழ்க்கைக்கு கணவன்-மனைவி இடையே பொறுமை இருக்க வேண்டும் என சாணக்கியர் கூறுகிறார். நல்ல நேரத்தை எமக்கு சாதகமாக மாற்றிக் கொள்ள பொறுமை மிக அவசியம். அவசரப்பட்டு முடிவு எடுப்பதால் கணவன்-மனைவி இடையேயான உறவு விரைவில் சீர்குலைந்துவிடும்.
3. திருமண உறவில் ஈகோ இருக்கவே கூடாது. இது ஒருவரை ஒருவர் அழித்து விடும். தற்பெறுமை கொள்ளும் உணர்வு இருந்தாலும் வாழ்க்கையில் கஷ்டபட வேண்டியிருக்கும். ஈகோ வளரத் தொடங்கினால் உறவில் விரிசல் ஏற்படும்.
4. கணவன் மனைவிக்கிடையே பலவிதமான விஷயங்கள் இருக்கும். இதை ஒரு போதும் வெளியில் கூறக் கூடாது. ஒருவர் ஒருவரை புரிந்து கொண்டு வாழ பழகிக் கொள்ள வேண்டும். மூன்றாவது நபருடன் ஒருபோதும் இடம் கொடுக்கக் கூடாது என்று சாணக்கியர் கூறுகிறார்.
5. யார் சண்டை போட்டாலும் விட்டு கொடுப்பு கண்டிப்பாக இருக்க வேண்டும். கணவன் - மனைவியாக திருமண வாழ்க்கைக்குள் நுழையும் நபர்கள் தன்னுடைய துணைக்காக எதையும் செய்யும் எண்ணம் கொண்டிருப்பது அவசியம்.