மேலதிக வகுப்புக்களை நடத்துவதற்கான அனுமதி வழங்கப்படவில்லை என கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல் பீரிஸ் தெரிவித்துள்ளார்.

மேல் மாகாணத்தில் இதுவரையில் கல்வி நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்படாதிருந்த 5,11 மற்றும் 13 தர வகுப்புக்கள் தவிர்ந்த ஏனைய வகுப்புக்களின் கல்வி நடவடிக்கைகள் எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்படவிருப்பதாகக் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

இதற்கான சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகத்தின் எழுத்து மூலமான அனுமதி நேற்று கிடைத்திருப்பதாகவும் கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.

அத்துடன், மேலதிக வகுப்புக்களை ஆரம்பிப்பதற்குச் சுகாதார அமைச்சு இது வரையில் அனுமதி வழங்கவில்லை என கல்வி அமைச்சர் தெரிவித்துள்ளார்.