பொதுவாகவே ஆண்களும் சரி பெண்களும் சரி அழகாக இருக்க வேண்டும் என்று தான் ஆசைப்படுவார்கள்.

குறிப்பாக பெண்கள் என்றால் சொல்லவே வேண்டாம். இவர்கள் எப்போதுமே தங்கள் அழகில் மிகுந்த அக்கறை காட்டுவார்கள்.

வெறும் 15 நிமிடத்தில் முகத்தோட கலர் கூடணுமா? பீட்ரூட் இருந்தா போதும் | Beetroot Face Pack For Instant Glowing Skin

தற்போதைய பிஸியான வாழ்க்கை முறையால் முகத்தை பராமரிப்பதற்கு அதிக நேரம் கிடைப்பதில்லை.

அதனால் வெறும் 15 நிமிடத்தில் வீட்டில் கிடைக்ககூடிய பொருட்களை கொண்டு முகத்தை எவ்வாறு பொலிவாக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.​

வெறும் 15 நிமிடத்தில் முகத்தோட கலர் கூடணுமா? பீட்ரூட் இருந்தா போதும் | Beetroot Face Pack For Instant Glowing Skin

பீட்ரூட் பேஸ்ட் - பாதி அளவு, தயிர் - 2 ஸ்பூன், பயன்படுத்தும் முறை அரை பீட்ரூட்டை பேஸ்ட்டாக அரைத்து ஒரு கிண்ணத்தில் எடுத்துக் கொள்ளுங்கள்.

கடைகளில் கிடைக்கும் பீட்ரூட் பவுடரையும் பயன்படுத்தலாம். அதனுடன் 2 தே.கரண்டி தயிரையும் சேர்த்து நன்கு பேஸ்ட் பதத்தில் கலந்துக்கொள்ள வேண்டும்.

வெறும் 15 நிமிடத்தில் முகத்தோட கலர் கூடணுமா? பீட்ரூட் இருந்தா போதும் | Beetroot Face Pack For Instant Glowing Skin

பின்னர் முகத்தை நன்றாக கழுவி சுத்தம் செய்துவிட்டு இந்த பேஸ்டை முகம் மற்றும் கழுத்து பகுதியில் நன்றாக தடவிக்கொள்ள வேண்டும்.

பின்னர் 15 தொடக்கம் 20 நிமிடங்கள் நன்றாக உலர விட்டு, பின் முகத்தை குளிர்ந்த நீரால் கழுவினால் முகம் உடனடியாக பொலிவு பெறுவதை கண்கூடாகவே பார்க்கலாம்.

வெறும் 15 நிமிடத்தில் முகத்தோட கலர் கூடணுமா? பீட்ரூட் இருந்தா போதும் | Beetroot Face Pack For Instant Glowing Skin

இது இயற்கை முறையில் தயாரிக்கப்பட்ட ஃபேஸ்பேக் என்பதால் எந்த பக்கவிளைவுகளும் இருக்காது.

வாரத்தில் மூன்று முறைகள் இதனை பயன்படுத்தி வந்தாலே முகத்தின் நிறம் இயற்கையாக அதிகரிக்கும்.