கண்களில் உள்ள கருவளையம் நீங்கி உங்கள் முகத்தை பொலிவாக வைத்திருக்க உருளைக்கிழங்கை எப்படி பயன்படுத்த வேண்டும் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.
உருளைக்கிழங்கு சமயலில் மட்டும் தன் சிறப்பை காட்டவில்லை. முகத்தை பளபளப்பாக வைத்துக்கொள்ளும் பல சிறப்பம்சங்களை இது தன்னுள் வைத்துள்ளது.
உருளைக்கிழங்கைக் கொண்டு விதவிதமான ஃபேஸ் மாஸ்க் தயாரிக்கலாம். உருளைக்கிழங்கை சுத்தம் செய்து தோல் நீக்கி அதை சிறு துண்டுகளாக நறுக்கி வைக்கவும்.
நறுக்கிய உருளைக்கிழங்கை மிக்ஸியில் சேர்த்து அதனுடன் மாதுளை முத்துக்கள் கால் கப் சேர்த்து மீண்டும் மென்மையாக அரையுங்கள்.
இதில் தண்ணீர் சேர்க்க தேவையில்லை. எண்எணய் சருமம் கொண்டவர்கள் இதில் கொஞ்சமாக எலுமிச்சை சாறு சேர்த்துக்கொள்ளலாம். இதை இறுக்கமாக ஆகும் வரை ஃப்ரிட்ஜ்ஜில் வைத்திருங்கள்.
அரைமணி நேரம் கழித்து அதை வெளியில் எடுத்து வட்ட வடிவில் மசாஜ் செய்வது போல் முகத்தில் கீழிருந்து மேல் நோக்கி தடவியபடி தேய்க்கவும்.
பிறகு 30 நிமிடங்கள் கழித்து முகத்தை வெதுவெதுப்பான நீரில் கழுவி எடுத்தால் முகம் மென்மையாக மிருதுவாக இருப்பதை உணரலாம்.
முகத்தில் இருக்கும் கறைகள் வெளியில் தெரியாது. உறங்குவதற்கு முன்னர் உருளைக்கிழங்கு சாறை எடுத்து முகத்தில் தடவி 30 நிமிடம் கழித்து குளிர்ந்த நீரினால் கழுவினால் முகம் பொலிவு பெறுவதுடன் இரவில் ஆழ்ந்த தூக்கத்திற்கும் இது வழிவகுக்கும்.