அட்சய திரிதியை என்பது ஆன்மிக ரீதியாக மட்டுமின்றி, ஜோதிட ரீதியாகவும் மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த நாளாக கருதப்படுகிறது. அதிலும் இந்த ஆண்டு மே 10ம் திகதி வரும் அட்சய திரிதியை அன்று பலவிதமான யோகங்கள் ஒன்று கூட உள்ளன. இது சில குறிப்பிட்ட ராசிக்காரர்களுக்கு அதிர்ஷ்டத்தையும், செல்வத்தையும் அள்ளிக் கொடுக்க போகிறது.

அட்சய திரிதியை அன்று ராஜயோகம் உருவாக உள்ள 3 ராசிகள் | Astrology Atsaya Kiriyai Anru Yogam Perum 3 Rasi

ஜோதிட சாஸ்திரப்படி, மே 10ம் திகதி ரிஷப ராசியில் சந்திரன்-குரு சேர்க்கை நடைபெற உள்ளதால் கஜகேசரி யோகமும், மேஷ ராசியில் சூரியன்-சுக்கிரன் இணைவால் சுக்ராதித்ய யோகமும் உருவாக உள்ளது.

அட்சய திரிதியை அன்று ராஜயோகம் உருவாக உள்ள 3 ராசிகள் | Astrology Atsaya Kiriyai Anru Yogam Perum 3 Rasi

அது மட்டுமல்ல செவ்வாய்- புதன் இணைவால் தன யோகமும், கும்ப ராசியில் சனி அமர்வதால் ஷஷ யோகமும், மீன ராசியில் இருக்கும் செவ்வாயால் மாளவ்ய ராஜயோகமும் உருவாக உள்ளது இத்தனை யோகங்களும் ஒரே நாளில் கூடி வருவதால் 3 ராசிகளுக்கு பெரும் அதிர்ஷ்டத்தை ஏற்படுத்த போகின்றது.

மேஷம் 

அட்சய திரிதியை அன்று உருவாகும் தன யோகத்தால் மேஷ ராசிக்காரர்களுக்கு பொருளாதார ரீதியாக முன்னேற்றம் ஏற்பட போகிறது. தொழில் மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி அதிகரிக்கும். குடும்ப வாழ்க்கையில் நிம்மதியும், மகிழ்ச்சியும் நிறைந்திருக்கும். சிலருக்கு பூர்வீக சொத்துக்களால் ஆதாயம் ஏற்பட வாய்ப்புண்டு. ஏற்கனவே மே 01 ம் தேதி நடைபெற உள்ள குருப்பெயர்ச்சி, மேஷ ராசிக்காரர்களுக்கு அதிக அளவிலான நல்ல பலன்களை அள்ளி தர உள்ள நிலையில் இதைத் தொடர்ந்து வரும் அட்சய திரிதியையும் அவர்களுக்கு அதிர்ஷ்டத்தை தருவதாக அமைய போகிறது

அட்சய திரிதியை அன்று ராஜயோகம் உருவாக உள்ள 3 ராசிகள் | Astrology Atsaya Kiriyai Anru Yogam Perum 3 Rasi

ரிஷபம்

அட்சய திரிதியை அன்று உருவாகும் யோகங்கள் ரிஷப ராசிக்காரர்களுக்கு மிகப் பெரிய வரப் பிரசாதமாக இருக்கும். பொருளாதார நிலை, வேலை மற்றும் வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். மகாலட்சுமியின் பரிபூரண ஆசிகள் உங்களுக்கு கிடைக்கும். அட்சய திரிதியை நாளில் லட்சுமி பூஜை செய்து, மகாலட்சுமியை மனதார வழிபடுவதால் கூடுதல் நற்பலன்களை பெற முடியும். இந்த சமயத்தில் நீங்கள் செய்யும் முதலீடுகள் உங்களுக்கு நீண்ட காலத்திற்கு லாபத்தை கொடுப்பதாக அமையும். சனிப்பெயர்ச்சி, குருப்பெயர்ச்சி என அனைத்து கிரக பெயர்ச்சிகளும் உங்களுக்கு சாதகமாக இருப்பதால் இனி வரும் காலங்கள் உங்களுக்கு அதிர்ஷ்டகரமானதாக இருக்கும்

அட்சய திரிதியை அன்று ராஜயோகம் உருவாக உள்ள 3 ராசிகள் | Astrology Atsaya Kiriyai Anru Yogam Perum 3 Rasi

மீனம்

அட்சய திரிதியை அன்று உருவாகும் ஷஷ யோகம் மற்றும் மாளவ்ய ராஜயோகத்தால் மீன ராசிக்காரர்களின் வாழ்வில் மிகப் பெரிய மாற்றம் ஏற்படும். இது அவர்களின் வாழ்வில் செல்வ செழிப்பை ஏற்படுத்தும். வீட்டிலும், வெளியிலும் மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். உங்களின் கடின உழைப்பிற்கு இனி பலன் கிடைக்கும். இதுவரை நீங்கள் பட்ட கஷ்டங்களுக்கு இனி முடிவு ஏற்படும். குடும்பத்தினர்கள் உங்களை புரிந்து கொள்வார்கள். அட்சய திரிதியை அன்று அமைய போகும் யோகத்தால் இனி உங்களின் வாழ்வில் வெற்றி மேல் வெற்றி குவிய போகிறது.

அட்சய திரிதியை அன்று ராஜயோகம் உருவாக உள்ள 3 ராசிகள் | Astrology Atsaya Kiriyai Anru Yogam Perum 3 Rasi