உடல் ஆரோக்கியமாக இருக்க வேண்டும் என்றால் ஊட்டச்சத்து மிக்க உணவுகள் மற்றும் உடற்பயிற்ச்சி எந்தளவு முக்கியமோ அதே அளவு சிறந்த தூக்கமும் இன்றியமையாதது.

இரவில் எந்தளவிற்கு நன்றாக தூங்குகின்றோமோ மறு நாள் அவ்வளவுக்கு சுறுசுறுப்பாகவும் தெளிவான மனநிலையுடனும் வேலைகளில் ஈடுபட முடியும்.

தூக்கத்தில் உளறுபவரா நீங்கள்? இதை கட்டுப்படுத்துவது எப்படி? | Do You Talk In Your Sleep This The Reason

குறிப்பிட்ட சிலருக்கு தூக்கத்தில் பேசும் வழக்கம் இருக்கின்றது. கனவு வருவது எப்படி அறிவியலை மீறிய அற்புதமான விடயமோ அது போல் தூக்கத்தில் பேசுவதும் புரியாத புதிராகவே இருக்கின்றது.

சிலர் தூங்கும் போது உளரும் அல்லது முணுமுணுக்கும் பழக்கத்தை கொண்டிருப்பார்கள். ஆனால் சிலர்பேர் தெளிவாக புரியும்படி தூக்கத்தில் பேசிக்கெண்டிருக்கின்றார்கள்.

தூக்கத்தில் உளறுபவரா நீங்கள்? இதை கட்டுப்படுத்துவது எப்படி? | Do You Talk In Your Sleep This The Reason

இது வயது வித்தியாசம் மற்றும் பாலின வேறுபாடு இன்றி அனைவரையும் தாக்கும் ஒரு பிரச்சினையைாக இருக்கின்றது. இது ஒரு நோய்நிலைமையா? இதற்கு என்ன காரணம் மற்றும் இதற்கான சிகிச்சை என்பன குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

3 முதல் 10 வயதிற்கு இடைபட்டோரே பொரும்பாலும் இந்த பிரச்சினையால் பாதிக்கப்படுகினறார்கள்.இவர்கள் பெரியவர்கள் ஆனதும் இந்த பழக்கம் தானாகவே இல்லாமல் போய் விடுகின்றது. 

தூக்கத்தில் உளறுபவரா நீங்கள்? இதை கட்டுப்படுத்துவது எப்படி? | Do You Talk In Your Sleep This The Reason

இருப்பினும் சிறுவயதில் தூக்கத்தில் பேசும் பழக்கத்தை கொண்டிருப்போரில் 5 சதவீதத்தினருக்கு பெரியவர்கள் ஆன பின்னரும் கூட இந்த பிரச்சினை தொடரும் வாய்ப்பு காணப்படுகின்றது. 

தூக்கத்தில் பேசுதல் பழக்கமானது மரபணு சம்பந்தப்பட்டதாக இருக்கும் பட்சத்தில் இது  அடுத்தடுத்த தலைமுறைகளையும் கூட பாதிக்கும் வாய்ப்பு காணப்படுகின்றது.

உண்மையில் இதற்கான சரியான விளக்கம் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.இருப்பினும் இந்த பிரச்சினை கனவுடன் தொடர்புடையதாக இருக்கலாம் என்ற கருத்து காணப்படுகின்றது.

மன அழுத்தம், ஒரு சில மருந்துகள், காய்ச்சல், அல்லது  போதை மருந்து பாவனை போன்றனவும் தூக்கத்தில் பேசும் பழக்கம் ஏற்படுவதற்கு காரணமாக இருக்கின்றது. 

தூக்கத்தில் உளறுபவரா நீங்கள்? இதை கட்டுப்படுத்துவது எப்படி? | Do You Talk In Your Sleep This The Reason

மேலும் REM ஸ்லீப் பிஹேவியர் டிஸார்டர் (RBD), நாக்டர்னல் ஸ்லீப் ரிலேட்டட் ஈட்டிங் டிசார்டர் (NS-RED) போன்ற தூக்கம் சம்பந்தப்பட்ட பிரச்சினைகள் காரணமாகவும் இந்த பிரச்சினை ஏற்படலாம்.

மனஅமுத்தம் அதிகரிப்பதும் வெளியில் சொல்லப்படாத பல விடயங்களை மனதில் போட்டு குழப்பிக்கொள்வதும் கூட தூக்கத்தில் பேசும் பிரச்சினையை உருவாக்குகின்றது. இது உங்கள் தூக்கத்தை பாதிக்காத வரையில் இது குறித்த கவலையடைய தேவையில்லை.

தூக்கத்தில் உளறுபவரா நீங்கள்? இதை கட்டுப்படுத்துவது எப்படி? | Do You Talk In Your Sleep This The Reason

ஆனால் இந்த பிரச்சினை தூக்கத்தில் பாதிப்பை ஏற்படுத்தில் மருத்துவ ஆலோசனை பெற வேண்டியது அவசியம்.

தூங்கும் முன்னர் டைரி எழுதும் பழக்கத்தை ஏற்படுத்திக்கொள்வதன் மூலம் இந்த பிரச்சினையை கட்டுப்படுத்தலாம்.

தூக்கத்தில் உளறுபவரா நீங்கள்? இதை கட்டுப்படுத்துவது எப்படி? | Do You Talk In Your Sleep This The Reason

மேலும் முறையான தூக்க அட்டவணையை பின்பற்றுவது மற்றும் மன அழுத்தத்தை குறைக்கும் தியானம் மற்றும் யோகா பயிற்சிகளில் ஈடுப்படுவதும் இந்த பிரச்சினைக்கு தீர்வு கொடுக்கும்.