ஜாதகப்படி, சனி தோஷத்தால் பாதிக்கப்பட்டு துன்பப்படுபவர்கள் விநாயகரை வழிபட்டால் நீங்கும் என்பது நம்பிக்கை.

சனி பகவான் விநாயகரை கண்டு ஏன் பயன்படுகிறார் என்பதற்கு ஒரு புராணக் கதை கூறப்படுகிறது.

ஒரு சமயம் ஆற்றங்கரையில் ஒரு மரத்தடியில் நிஷ்டையில் இருந்த விநாயகர், தன்னைப் பிடிப்பதற்காக சனி பகவான் வருவதை அறிந்து கொண்டார். 

சனி பகவான் வந்ததும் ஒரு தலைச்சுவடியை அவரிடம் நீட்டினார். அதில், "இன்று போய் நாளை வா" என்று எழுதி இருந்தது. பின்னர் அதை அரச மரத்தடியில் வைத்தார்.

விநாயகரை கண்டு பயப்படும் சனி பகவான்: ஏன் தெரியுமா? | Why Lord Shani Is Afraid Of Vinayaka

பின்பு சனி பகவானிடம், "சனீஸ்வரா, எந்த நாளும் இந்த அரச மரத்திற்கு வருக. இந்த ஓலைச்சுவடியில் என்ன எழுதி இருக்கிறதோ அதன்படி நடப்பாயாக" என்று சபித்து விட்டு மறைந்து விட்டார்.

அதன்படி சனி பகவான் தினமும் அந்த அரச மரத்தடிக்கு சென்று அதில் உள்ள வாசகத்தை படித்து ஏமாந்தபடி திரும்புவது வழக்கமானது.  

இப்படி பல்லாயிரக்கணக்கான வருடங்கள் ஏமாந்துபோன சனி பகவான், விநாயகரை பிடிப்பது என்பது முடியாத காரியம் என்று உணர்ந்து அவரை துதித்து வழிபட தொடங்கினார்.

விநாயகரும் அவர் முன் தோன்றி, "சனீஸ்வரா காரணமின்றி உனது சக்தியை பயன்படுத்தி தவறாக நடக்கக்கூடாது. இதற்கு உன் அனுபவம் ஒரு படிப்பினையாகட்டும்.

இன்று முதல் என்னை வணங்கும் பக்தர்களையும் நீ பிடித்து துன்புறுத்தக் கூடாது" என்று கூறி அவருக்கு ஆசி அளித்து மறைந்தார்.

அந்தவகையில், விநாயகப்பெருமானை வழிபடுபவர்களை சனி பிடிக்காதது மட்டுமல்ல, சனியின் கெடுபலன்களையும் குறைத்து அருள்புரிகிறார்.