அமெரிக்க அதிபர் டிரம்ப் பயணம் செய்த விமானத்தில் சிறிய ரக ட்ரோன் ஒன்று மோதியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
நேற்று மாலை ட்ரம்ப் சென்ற ஏர்போர்ஸ் ஒன் விமானம் வாஷிங்டனில் தரையிறங்க முயன்றது. அப்போது மஞ்சள் மற்றும் கருப்பு வண்ணத்திலிருந்த ட்ரோன் ஒன்று விமானத்தின் வலது பக்கத்தில் மோதியதாகக் கூறப்படுகிறது.
பல அடுக்கு பாதுகாப்பு அம்சங்களைக் கொண்ட அந்த விமானத்தின் மீது ட்ரோன் மோதியது தொடர்பாக ரகசிய விசாரணை நடத்தப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த விசாரணையை அமெரிக்க உளவுத்துறையும், வான் பாதுகாப்பு பிரச்சினைகளை ஒருங்கிணைக்கும் வட அமெரிக்க விண்வெளி பாதுகாப்பு அமைப்பு முன்னெடுத்து நடத்துவதாகக் கூறப்படுகிறது.