ஸ்மார்ட் போன்களில் அடிக்கடி பல புதிய தொழில்நுட்பங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு வருகின்ற நிலையில், தற்போது அதற்கெல்லாம் ஒரு படி மேலே போய் விவோ ஸ்மார்ட் போனில் ட்ரோன் கேமரா செட்டப் வழங்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதன்படி, ட்ரோன் கேமராவை ஆக்டிவேட் செய்ததும் ஸ்மார்ட் போனிலிருந்து தனியாக பிரிந்துபோய் காற்றில் மிதக்க தொடங்கிவிடும்.

அதன் பின்னர், கேமரா எவ்வளவு தூரம் பறக்க வேண்டும், எந்தக் கோணத்திலிருந்து படம்பிடிக்க வேண்டும் என்பதை இதற்காக உருவாக்கப்படும் செயலியின் மூலம் கட்டுப்படுத்த முடியும்.

இந்த சாதனம் விற்பனைக்கு வந்தவுடன், ஸ்மார்ட்போன் மூலம் புகைப்படம் மற்றும் வீடியோ எடுக்கும்முறையானது முற்றிலும் மாறிவிடும்.