பொதுவாகவே அனைவரின் வீட்டிலும் இருக்கும் அழிக்க முடியாத தொல்லைகளில் ஒன்று தான் கரப்பான் பூச்சி.
அதனை அழிக்க சந்தைகளில் ஏராளமான இரசாயனம் கலந்த மருந்து பொருட்கள் கிடைக்கின்றன. ஆனால் அவற்றை வீடுகளில் பயன்படுத்துவது குழந்கைள் மற்றும் வயதானவர்களுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
அதிலும் குழந்தைகள் வீட்டில் இருந்தால், இத்தகைய மருந்துக்களை பயன்படுத்துவது ஆபத்தானது. வீட்டில் கரப்பான் பூச்சி தொல்லை அதிகரித்தால் அதிகம் செலவு செய்து மருந்துகளை வாங்க வேண்டிய அவசியம் இல்லை.
கரப்பான் பூச்சியை எவ்வாறு இயற்கை முறையில் விரட்டியடிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
இதனை பயன்படுத்தி எளிமையாக கரப்பான் பூச்சிகளை ஒழிக்கலாம். போரிக் அமிலம் கடைகளில் கிடைக்கின்றது.
இதனை வாங்கி அரிசி மாவுடன் கலந்து சிறு சிறு உருண்டைகளாக செய்து கரப்பான் பூச்சிகள் அதிகமாக நடமாடும் இடங்களில் போட்டுவிட்டால் இந்த வாசனைக்கு கரப்பான் பூச்சிகள் வராது.
கரப்பான் பூச்சிகளை விரட்ட பேக்கிங் சோடா மிகச்சிறந் தெரிவாக இருக்கின்றது. பொதுவாகவே பேக்கிங் சோடா வீட்டில் சமையலுக்கு பயன்படுத்தும் பொருள் என்பதால் எளிதில் கிடைக்கும்.
பேக்கிங் சோடாவை சர்க்கரையுடன் கலந்து பேஸ்ட் தயாரித்து அதனை கர்ப்பான் பூச்சிகள் அதிகம் உலாவும் இடங்களில் தடவினால் கரப்பான் பூச்சிகள் அந்த பக்கமே வராது.
தண்ணீர் குழாய்கள் இருக்கும் இடங்களில் கரப்பான் பூச்சிகள் அதிகமாக நடமாடும். இரவ நேரத்தில் இந்த பகுதிகளில் வினிகரை ஊற்றி வைத்தால் கரப்பான் பூச்சிகள் வரவே வராது.
எலுமிச்சை மற்றும் சோடா ஆகியவற்றை கலந்து பேஸ்ட் போன்று தயார் செய்து அதனை கர்ப்பான் பூச்சிகள் அதிகம் உலாவும் இடங்களில் தடவினால் கரப்பான் பூச்சிகள் இருந்த இடம் தெரியாது ஓடிவிடும்.