AI தொழில்நுட்பமானது உலகளாவிய ரீதியில் பல மாற்றங்களுக்கு வித்திடுவதாக அமைகிறது. இந்த தொழில்நுட்பமானது நன்மை, தீமை என அனைத்தையும் செய்யக்கூடிய ஒன்றாக மாறிவிட்டது.
கற்பனைக்கும் எட்டாத பல விடயங்களை சாத்தியமாக்கி அனைவரையும் வாய் பிளக்க வைக்கிறது AI.
AI Teacher, AI news reader என அனைத்து துறைகளிவும் தாக்கம் செலுத்தும் இந்த தொழில்நுட்பமானது, ஸ்மார்ட்போன்களின் வளர்ச்சியிலும் அப்டேட்களிலும் ஒரு அங்கமாக மாறவுள்ளது.
அதன்படி, அடுத்ததாக புகைப்பட எடிட்டிங்கில் புது சாதனை படைக்கவுள்ளது AI Eraser.
AI Eraser எனும் அம்சத்தை ஒன்ப்ளஸ் நிறுவனம் தனது ஒன்ப்ளஸ் ஸ்மார்ட்போன்களுக்கு அறிவித்திருக்கிறது. கூகுளின் மெஜிக் இரேசர் எனும் இந்த அம்சம் ஒரு புகைப்படத்தில் இருக்கும் தேவையற்ற விடயங்களை நீக்கிவிடும்.
இந்த புதிய ஏ.ஐ இரேசர் அம்சத்தை எவ்வாறு பயன்படுத்த வேண்டுமென்றால், பயனர்கள் புகைப்படத்தில் இருக்கும் தேவையில்லாத பொருட்கள், மனிதர்கள் அல்லது இடையூறுகளை குறிப்பிட்டதும் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பமானது, அவற்றை நீக்கி செயற்கையாக ஒரு பேக்கிரவுண்டை உருவாக்கும்.
இந்த பேக்கிரவுண்ட் குறித்த புகைப்படத்துடன் நன்றாக ஒற்றுபோகும் வகையில் அமைந்திருக்கும்.
இந்த புது அம்சமானது, வரவிருக்கும் காலங்களில் ஸ்மார்ட்போன்களில் ஒரு பெரிய மாற்றத்தை செய்யவிருக்கிறது.
AI Eraser பயன்படுத்தும் முன்
AI Eraser பயன்படுத்திய பின்