எந்த ஒரு குறிப்பிட்ட எழுத்தில் பெயர் ஆரம்பிக்கிறதோ, அதற்கு ஏற்றார் போல உங்கள் பெயருக்கான பலனும் இருக்கும் என்கிறது ஜோதிட சாஸ்திரம்.

அந்த வகையில் தமிழில் அ, ஆ போன்ற பெயர்கள் 'A' என்ற எழுத்தில் ஆரம்பிக்கும். அப்படி A என்ற எழுத்தில் ஆரம்பிக்கும் பெயர் கொண்டவர்களுக்கு எப்படிப்பட்ட ஆளுமையுடையவர்களாக இருப்பார்கள் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.

உங்க பெயர் A எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்போ இந்த குணங்கள் கட்டாயம் இருக்கும் | What Is The Personality Of A Name Starting With A

A என்ற எழுத்து பொதுவாக நாம் பார்க்க கோபுரம் அல்லது பிரமிடு போன்று காட்சி தருவதை உணரலாம்.

இவர்கள் எந்த ஒரு விஷயத்தையும் முடிக்க வேண்டும் என்ற எண்ணம் கொண்டதோடு, வாழ்க்கையில் ஒரு குறிக்கோளைக் கொண்டவராகவும், அதை அடைய உழைப்பவராகவும் இருப்பார்கள்.

ஒரு விதிமுறையை வகித்துக் கொண்டு தான் எதை அடைய வேண்டும் என்று நினைக்கின்றார்களோ அதை நோக்கி ஓடுவார்கள். அதை அடையும் வரை எந்த ஒரு கவன சிதறலும் பெரும்பாலும் இருக்காது.

உங்க பெயர் A எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்போ இந்த குணங்கள் கட்டாயம் இருக்கும் | What Is The Personality Of A Name Starting With A

இவர்களில் பெரும்பாலானோர் எந்த ஒரு ஆலோசனை அல்லது விமர்சனத்தை ஏற்றுக் கொள்ளமாட்டார்கள். அவர்களாக உணரும் போது தான் அதை மற்றிக் கொள்ள நினைப்பார்கள்.

அல்லது ஆலோசனையைக் கேட்பார்கள். அதுமட்டுமல்லாமல் தங்களின் திறமையை மற்றவர்கள் பாராட்ட வேண்டும் என்றும், எந்த ஒரு இடத்திலும் தான் முன்னிலை வகிக்க வேண்டும் என நினைப்பார்கள்.

மரியாதையை அதிகம் விரும்புவார்கள். ஒரு நபருக்கு A என்ற எழுத்தில் பெயர் வைப்பது மட்டுமல்லாமல், ஒரு நிறுவனத்திற்கு A என்ற எழுத்தில் பெயர் வைத்தால் நல்ல வெற்றியும், முன்னேற்றத்தையும் தரக்கூடியதாக இருக்கும்.

உங்க பெயர் A எழுத்தில் ஆரம்பிக்கிறதா? அப்போ இந்த குணங்கள் கட்டாயம் இருக்கும் | What Is The Personality Of A Name Starting With A

A என்ற எழுத்தில் தொடங்கும் பெயர் வைத்திருக்கும் ஆண்கள் நல்ல ஆளுமை கொண்டவர்களாக இருப்பார்கள். மற்றவர்களை ஆளக்கூடிய, அதிகாரம் செலுத்தக்கூடியவர்களாக இருப்பார்கள்.

எந்த ஒரு செயலையும் திட்டமிட்டு செயல்படுவார்கள். எழுத்துக்களில் முதலாவதாக இருப்பது போல வெற்றியிலும் முதலிடத்தில் இருப்பார்கள்.

சமூகத்தில் மதிப்புடன், அதிக நண்பர்கள் கொண்டிருந்தாலும், சில நண்பர்களிடம் மட்டும் மிகவும் நெருக்கமாக இருப்பார்கள்.