கனவுகள் நமது ஆழ் எண்ணங்கள் மற்றும் பார்வைகளை வெளிப்படுத்துவதாக கனவு சாஸ்திரம் குறிப்பிடுகின்றது.
பொதுவாக நாம் காணும் கனவிற்கு என்ன பலன் என்று தெரிந்து கொள்வதற்கு அதிக ஆர்வமாக இருக்கும்.
இதற்காக நாம் நம் வீட்டில் உள்ள தாத்தா, பாட்டிகளிடம் அல்லது நமக்கு தெரிந்த பெரியவர்களிடம் நாம் கண்ட கனவினை கூறி அதற்கு என்ன பலன் என்று தெரிந்து கொள்வோம்.
அந்த வகையில் நம்மில் பலருக்கு பணம் பற்றிய கனவு வந்திருக்கும் எனவே கனவில் பணத்தை கண்டால் என்ன பலன் என்பது குறித்து இந்த பதிவில் பார்க்கலாம்.
கனவில் பணம் எண்ணுவது போல் கனவு கண்டால் தங்களுக்கு விரைவில் பணம் நெருக்கடி ஏற்படலாம் என்று அர்த்தமாகும். எனவே தாங்கள் பணம் கொடுக்கல் வாங்குதலில் அதிக கவனமாக இருக்க வேண்டும்.
தங்களுடைய கனவில் பணம் தொலைந்துபோவது போல் அல்லது திருட்டு போவது போல் கனவு கண்டால் தங்களுடைய கையிருப்பு கரையும் அதேபோல் யாருக்காவது பணம் கொடுத்திருந்தால் அந்த பணம் திரும்பவராது. தங்களுடைய நட்பும் முறியலாம்.
தங்களுடைய கனவில் பணம் கிடைக்கின்றது ஆனால் எங்கிருந்து கிடைக்கின்றது என்று தெரியாமல் இருந்தால் தாங்கள் மற்றவர்களுக்கு உதவும்போது மிகவும் கவனமாக இருக்க வேண்டும்.
பணத்தை தெருவில் விட்டெறிவது போல் கனவு கண்டால் தங்களுக்கு நண்பர்களால் ஏதாவது பிரச்சனை ஏற்படும்.
பணம் நோட்டு கட்டுகளை அடிக்கி வைப்பது போல் கனவு கண்டால் தங்களுக்கு அதிக வருவாய் வந்தாலும், அந்த வருவாயை தாண்டி தங்களுக்கு செலவும் வரும்.
பண கட்டுகளை துண்டு துண்டாக கிழிப்பது போல் கனவு கண்டால் தங்களுக்கு இரண்டு வாரத்திற்குள் யாரிடமிருந்தாவது பணம் கிடைக்கப்போகிறது என்று அர்த்தமாகும்.
கீழ் கிடைக்கும் பணத்தை எடுப்பது போல் கனவு கண்டால் தங்களுக்கு யாரிடமிருந்தாவது நல்ல தொகை கிடைக்கப்போவதாக அர்த்தமாகும்.