பொதுவாகவே ஆண்களானாலும் சரி பெண்களானாலும் சரி அடர்த்தியான, உறுதியான கூந்தலைப் பெற வேண்டும் என்ற ஆசை எல்லோருக்கும் இருக்கின்றது.
தற்காலத்தில் சுற்றுச்சூழல் மாசு மற்றும் காலநிலை மாற்றம் ஆகியவற்றுடன் சந்தைகளில் அதிகளவில் பெருகிப்போன இரசாயணம் கலந்த கூந்தல் பராமரிப்பு பொருட்களை பயன்படுத்துவது போன்ற காரணங்களினால் கூந்தல் உதிர்வு மற்றும் கூந்தல் வலுவிலக்கும் பிரச்சினைகள் அதிகமாக காணப்படுகின்றது.
இதை காரணம் காட்டி சமூகவளைத்தளங்களிலும் கூந்தல் உதிர்வை கட்டுப்பத்தவும் முடி வளர்ச்சியை துரிதப்படுத்வும் பல்வேறு உற்பத்தி கொருட்கள் பெருகிவிட்டன. ஆனால் இவை எந்தளவுக்கு வினைத்திறன் மிக்கவை மற்றும் பாதுகாப்பானவை என்பது கேள்விக்குறியே.
எனவே எந்தவித ரசாயன கவவையும் இல்லாமல் கூந்தலை இயற்கை முயையில் வேகமாக வளரச்செய்ய ஆயுள்வேத முறையில் வீட்டிலேயே எளிமையாக முறையில் எவ்வாறு ஆரோக்கியம் நிறைந்த எண்ணெய் தயாரிக்கலாம் என இந்த பதிவில் பார்க்கலாம்.
தேவையான பொருட்கள்
பொடித்த வெந்தயம் -3 தே.கரண்டி
வல்லாரைச்சாறு-100 ml
தேங்காய் எண்ணெய்-100 ml
கரிசலாங்கண்ணி சாறு-100 ml
நல்லெண்ணெய்-100 ml
நெல்லிக்காய் சாறு_100 ml
முதலில் கரிசாலங்கண்ணி மற்றும் வல்லாரக்கீரையை சுத்தம் செய்து அதன் சாற்றை பிழிந்து தனியாக எடுத்து வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் நெல்லிக்காயை கொட்டை நீக்கி தண்ணீர் சேர்க்காமல் அதன் சாறினையும் எடுத்து அவற்றின் சாறுகளை ஒரே கிண்ணத்தில் ஊற்றி வைத்துக்கொள்ள வேண்டும்.
பின்னர் இரும்பு கடாய் ஒன்றை அடுப்பில் வைத்து நல்லெண்ணெய் மற்றும் தேங்காய் எண்ணெய் ஆகிய இரண்டையும் கலந்து சூடானதும், கலந்த சாறுகளுடன் வெந்தயம் சேர்த்து இதை சூடேற்றிய எண்ணெயில் சேர்க்க வேண்டும்.
நன்றாக கொடுக்கவிட்டு இறக்கி, எண்ணெய் அறை வெப்பநிலையில் இருக்கும் போது ஒரு கண்ணாடி பாட்டிலில் ஊற்றி சேமித்துவைத்துக்கொள்ள வேண்டும்.
தினமும் இந்த எண்ணெயை உச்சந்தலையில் சில சொட்டுகள் விட்டு நன்றாக மசாஜ் செய்ய வேண்டும். பின்னர் இந்த எண்ணெயை முடியின் வேர் முதல், நுனி வரையில் படும் படி நன்றாக தடவி ,20 நிமிடங்கள் கழித்து தலைக்கு குளித்துவர விரைவில் முடி வளர்ச்சி அதிகரிக்கும்.
இந்த எண்னெயை பெண்கள், ஆண்கள் இருவருமே பயன்படுத்தலாம். அதனை தொடர்ச்சியாக பயன்படுத்திவர மாற்றத்தை கண்கூடாக அவதானிக்க முடியும்.
பயன்கள்
இந்த எண்ணெயில் அடங்கியுள்ள வல்லாரை கூந்தலின் ஆரோக்கியத்தை காப்பதில் பெரும் பங்கு வகிக்கின்றது.
கரிசலாங்கண்ணி கூந்தல் வளர்ச்சியை துரிதப்படுத்துவதில் பெயர் பெற்ற மூலிகையாக இருக்கின்றது. இது கூந்தலை இயற்கை முறையில் கருமையயாகவும் அடர்த்தியாகவும் வளரச்செய்யும்.
நல்லெண்ணய் உடல் சூட்டை தணிக்க உதவுவதால், தேங்காய் எண்ணெயில் கொழுப்பு அமிலங்கள் நிறைந்திருப்பதாலும் இயற்கையாகவே கூந்தல் உதிர்வை கட்டுப்படுத்தி புதிய முடி வளர்ச்சியை தூண்டுகின்றது.