பொதுவாகவே வாழ்வில் இன்பமும் துன்பமும் இயற்கையாகது தான். ஒரு பருவத்தில் கஷ்டப்பட்டவர்கள் இன்னொரு காலத்தில் நன்றாக வாழ்வார்கள். இதுவே இயற்கையின் நியதி.

ஜோதிட சாஸ்திரத்தின் அடிப்படையில் கிரக நிலை நன்றாக இருந்தால், ஆண்டியும் அரசனாவான்.அதே போல கிரக நிலைகள் சரியில்லாத போது வாழ்கையில் பல்வேறு துன்பங்களை எதிர்நோக்க வேண்டியேற்படும்.

உங்கள் வாழ்வில் துன்பம் வரபோவதை எச்சரிக்கும் அறிகுறிகள் இதோ..! என்னென்ன தெரியுமா? | What Are The Signs Before Suffering Upcoming Days

இந்து சாஸ்திரத்தின் அடிப்படையில் கெட்ட விடயங்கள் அல்லது ஏதோ கெட்ட விடயம் நடக்க போகிறது என்றால் அதற்கான அறிகுறிகள் முன்கூட்டியே தெரியும்.

ஒருவர் வாழ்க்கையில் பிரச்சனைகளை அல்லது துரதிர்ஷ்டத்தை சந்திக்கப்போகிறார்கள் என்பதற்கு முன்கூட்டியே சில அறிகுறிகள் தென்படும் என குறிப்பிடப்படுகின்றது.

அவ்வாறு வாழ்வில் கஷ்டம் ஏற்பட போவதை உணர்த்தும் அசுப அறிகுறிகள் தொடர்பில் இந்த பதிவில் பார்க்கலாம்.

உங்கள் வாழ்வில் துன்பம் வரபோவதை எச்சரிக்கும் அறிகுறிகள் இதோ..! என்னென்ன தெரியுமா? | What Are The Signs Before Suffering Upcoming Days

இந்து மதத்தில் துளசி புனிதமானதாக கருதப்படுகிறது. அதுமட்டும் அல்ல, துளசி லட்சுமி மற்றும் விஷ்ணுவின் வடிவமாக பார்க்கப்படுகிறது. துளசி செடியை வீட்டில் பசுமையாக வைப்பதன் மூலம், லட்சுமி தேவியின் ஆசி உங்களுக்கு நிலைத்திருக்கும்.

அப்படி புண்ணியமாக பார்க்கப்படும் துளசி செடி அடிக்கடி வாடினால் அது நல்லது அல்ல. துளசி வாடினால் வீட்டில் எதிர்மறையான ஆற்றல் அதிகரிக்கும். வீட்டில் கெட்ட விஷயங்கள் நடக்கலாம். துளசி செடி காய்ந்த உடனேயே புதிய செடியை நட்டால் நிலைமை மேம்படும்.

உங்கள் வாழ்வில் துன்பம் வரபோவதை எச்சரிக்கும் அறிகுறிகள் இதோ..! என்னென்ன தெரியுமா? | What Are The Signs Before Suffering Upcoming Days

வீட்டில் அடிக்கடி கண்ணாடி உடைந்தால் ஏதோ அசுப விடயம் நடக்கப்போகிறது என்று புரிந்து கொள்ளுங்கள். கண்ணாடி அல்லது கண்ணாடிப் பொருட்கள் அல்லது பீங்கான் ஆகியவை மோசமான நிகழ்வுகளை குறிப்பவை.

அடிக்கடி வீட்டில் கண்ணாடி உடைந்தால் ஏதோ நெருக்கடி வரப்போகிறது என்று அர்த்தம். அதே போல், கண்ணாடித் துண்டுகள் அல்லது உடைந்த பாத்திரங்களை வீட்டில் வைக்கக் கூடாது.

உங்கள் வாழ்வில் துன்பம் வரபோவதை எச்சரிக்கும் அறிகுறிகள் இதோ..! என்னென்ன தெரியுமா? | What Are The Signs Before Suffering Upcoming Days

வீட்டில் வைக்கும் தங்கம் காணாமல் போவது வழக்கம். சில சமயங்களில் காணாமல் போன தங்கம் நீண்ட நாட்களுக்கு பிறகு கிடைக்கும்.

ஆனால் அப்படி தங்கம் நீண்ட காலமாக கிடைக்கவில்லை என்றால், அது துரதிர்ஷ்டத்திற்கான அறிகுறி. இந்த அறிகுறிகள் பல இழப்பை குறிக்கிறது.எனவே இவ்வாறான அறிகுறிகள் நிகழ்ந்தால் கவனமாக இருக்க வேண்டும்.