நமது உடல் ஆரோக்கியத்திற்கு நட்ஸ் சாப்பிடுவது மிகவும் பயன் தரும். அந்த வகையில் பாதாமை சாப்பிடுவதால் உடலுக்கு என்ன பயன் என்பதை இந்த பதிவில் பார்க்கலாம்.

பாதாமில் அதிக நார்ச்சத்து மற்றும் கூடுதலான மருத்துவ குணங்கள் இருக்கின்றன. 

பாதாம் பருப்பில் வைட்டமின்கள், தாதுக்கள், ஆன்டிஆக்சிடன்ட்ஸ் மற்றும் ஆரோக்கியமான கொழுப்புகள் ஆகியவை நிறைந்துள்ளன.

தினமும் காலையில் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதால் என்ன பயன்? | Padam Is Good For Health Tamilபாதாம் பருப்பை நீங்கள் சாப்பிடும் போது அதிலிலுள்ள புரதம் மற்றும் நார்ச்சத்து உங்கள் வயிறை நிறைத்து வைத்திருக்கும். 

இதனால் குறைவான கலோரிகள் உடலில் சேர்வதால் இது உடல் எடை இழப்பிற்கு மிகவும் பயன் தரும். பாதாமில் இருக்கும் நல்ல கொழுப்பு ரத்தத்தில் உள்ள கெட்ட கொழுப்பின் அளவை குறைக்கும்.

தினமும் காலையில் ஊறவைத்த பாதாம் சாப்பிடுவதால் என்ன பயன்? | Padam Is Good For Health Tamil

இதில் இருக்கும் ஆகிஸிஜனேற்றிகள் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்க உதவுகிறது. மற்றும் நோய் பாதிப்பில் இருந்து எம்மை பாதுகாக்கிறது. 

மற்றும் வைட்டமின் இ வைட்டமின் பி6 மூளையை சுறுசுறுப்பா்கி அதன் செயற்பாட்டை அதிகரிக்கும் மற்றும் நினைவாற்றலை அதிகரிக்க உதவும்.

பாதாம் ரத்த சக்கரை அளவை கட்டுப்படுத்தி எலும்புகளை வலுப்படுத்த உதவும். எனினும் இந்த பருப்பை தினமும் சாப்பிடுவதென்றால் வைத்தியரின் அனுமதியை பெற்று சாப்பிடவும்.