2024ம் ஆண்டில் மே மாதத்தில் 1ம் தேதி குரு ரிஷப ராசியினர் பெயர்ச்சி அடையும் நிலையில் ஐந்து ராசியினருக்கு ராஜயோகம் கிடைக்கும்.

குரு என்று அழைக்கப்படும் வியாழன் கிரகம் மேஷ ராசியில் வக்ர நிவர்த்தியில் தற்போது பயணித்து வருகின்றார். இந்நிலையில் 2024ம் ஆண்டில், குரு மேஷ ராசியிலிருந்து வெளியேறி மே மாதம் 1ம் தேதி ரிஷப ராசிக்கு மாறுகின்றார்.

பின்பு மே மாதம் 6ம் தேதி குரு வக்ர நிலைக்கு செல்லும் நிலையில், ஜூன் 12ம் தேதி வியாழன் ரோகிணி நட்சத்திரத்தில் சஞ்சரிக்கிறார். இதனால் சில ராசியினருக்கு நல்ல பலன்கள் கிடைக்க இருக்கின்றது. அவை எந்தெந்த ராசி என்பதை இந்த பதிவில் தெரிந்து கொள்வோம்.

2024ம் ஆண்டில் உச்சத்தில் இருக்கும் குரு... ராஜயோகத்தை தட்டித்தூக்கும் 5 ராசியினர் | Jupiter Transit 2024 These Zodiac Sign Grand Luck

மேஷம்:

மேஷ ராசியினருக்கு இந்த குரு பெயர்ச்சியானது சாதகமாக இருப்பதுடன், நிதி நிலையில் நன்மைகளும் பெறுவார்கள். எதிர்பாராத நிதி ஆதாயங்களை பெறுவதுடன் முதலீட்டில் மூலமும் பயன் கிடைக்கும்.

வியாழனின் தாக்கத்தால் நீங்கள் தடைகளைச் சந்தித்து வந்த காரியங்களில் வெற்றி கிடைக்கும். இந்த புதிய ஆண்டில் மூதாதையர் சொத்துக்களால் பயனடைவீர்கள். இந்த ஆண்டில் திருமணமாகாதவர்களுக்கு திருமணம் கைகூடும்.

2024ம் ஆண்டில் உச்சத்தில் இருக்கும் குரு... ராஜயோகத்தை தட்டித்தூக்கும் 5 ராசியினர் | Jupiter Transit 2024 These Zodiac Sign Grand Luck

கடகம்:

இந்த குரு பெயர்ச்சியினால் கடக ராசியினருக்கு அதிர்ஷ்டம் ஏற்படுவதுடன், புதிய ஆதாரங்களும், வருமானமும் அதிகரிக்கின்றது.

வேலைவாய்ப்புகள் கிடைப்பதுடன், வியாழனின் தாக்கத்தால் இந்த ராசி மாணவர்கள் கல்வித்துறையில் இருந்து வந்த பிரச்சனைகள் நீங்கும்.

2024ம் ஆண்டில் உச்சத்தில் இருக்கும் குரு... ராஜயோகத்தை தட்டித்தூக்கும் 5 ராசியினர் | Jupiter Transit 2024 These Zodiac Sign Grand Luck

சிம்மம்:

சீறி வரும் சிம்ம ராசியினருக்கு இந்த குரு ராசி மாற்றம் சுப பலன்களை தருவதுடன், வேலை செய்பவர்களுக்கு சாதகமான சூழல் நிலவும், வியாபாரத்திலும் முன்னேற்றம் கிடைக்கும்.

ஆராய்ச்சியில் ஈடுபடும் இந்த ராசிக்காரர்களுக்கு 2024-ம் ஆண்டு மிகவும் சிறப்பான காலமாக அமையப் போகிறது. அரசு வேலைக்குத் தயாராகும் மாணவர்கள் மற்றும் விண்ணப்பதாரர்கள் வெற்றி பெறலாம்.

2024ம் ஆண்டில் உச்சத்தில் இருக்கும் குரு... ராஜயோகத்தை தட்டித்தூக்கும் 5 ராசியினர் | Jupiter Transit 2024 These Zodiac Sign Grand Luck

கன்னி:

இந்த புதிய ஆண்டில் வியாழன் உங்கள் ராசியை மாற்றுவதுடன், அதிர்ஷ்டத்தின் முழு ஆதரவையும் பெறுவீர்கள். நிலம், வாகனம் வாங்க நினைப்பவர்கள் நிச்சயம் இந்த ஆண்டில் நல்லதே நடக்கும். 

நல்ல அதிர்ஷ்டத்தை பெறும் இந்த ராசியினருக்கு வெளிநாட்டு பயணம் செல்லவும் வாய்ப்பு உள்ளது.

2024ம் ஆண்டில் உச்சத்தில் இருக்கும் குரு... ராஜயோகத்தை தட்டித்தூக்கும் 5 ராசியினர் | Jupiter Transit 2024 These Zodiac Sign Grand Luck

கும்பம்:

பொருளாதார ரீதியாக நல்ல பலன்களை பெறும் கும்ப ராசியினர், பணம் தொடர்பான விடயங்கள் கட்டுப்பாட்டில் இருக்கும். நீங்கள் முதலீடு செய்த பணத்திற்கு இந்த நேரத்தில் நல்ல பலன்கள் கிடைக்கும்.

கும்ப ராசிக்காரர்கள் இந்த நேரத்தில் புனித யாத்திரை செல்ல திட்டமிடலாம். இந்த நேரத்தில் நீங்கள் சகோதரர் மற்றும் மூத்த மாமாவின் ஆதரவைப் பெறுவீர்கள்.

2024ம் ஆண்டில் உச்சத்தில் இருக்கும் குரு... ராஜயோகத்தை தட்டித்தூக்கும் 5 ராசியினர் | Jupiter Transit 2024 These Zodiac Sign Grand Luck