இந்தியாவில் இருந்து 600,000 ஒக்ஸ்போர்டு-அஸ்ட்ராஜெனெகா கொரோனா தடுப்பூசிகளை கொண்டுவர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அதன்படி எதிர்வரும் 27 ஆம் திகதி புதன்கிழமை 600,000 டோஸ் கொரோனா வைரஸ் தடுப்பூசி இலங்கைக்கு வரும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஒக்ஸ்போர்ட்-ஆஸ்ட்ராஜெனெகா தடுப்பூசியை அவசரகால பயன்பாட்டிற்கு பயன்படுத்த இலங்கை அரசாங்கம் நேற்று வெள்ளிக்கிழமை அனுமதி வழங்கியிருந்தமை குறிப்பிடத்தக்கது.