வீட்டின் பூஜையறையில் எந்தெந்த சிலைகளை வைக்கக்கூடாது என்பதைக் குறித்து இந்த கட்டுரையில் தெரிந்து கொள்ளலாம்.

இந்து மதத்தை பின்பற்றுவர்கள் ஒவ்வொரு வீட்டிலும் பூஜை அறை இருக்கும். வீட்டில் உள்ள இந்த இடம் நேர்மறை ஆற்றலின் களஞ்சியம் ஆகும். அதுமட்டுமின்றி தினமும் தூபமிட்டு, தீபங்களை ஏற்றி வைப்பதன் மூலம் வீட்டில் நேர்மறை ஆற்றல் பாய்ந்து வீட்டில் மகிழ்ச்சியும் அமைதியும் நிலவும்.

ஆனால் பூஜை அறையில் சில தெய்வங்களை சிலையாக வைத்து வழிபடுவது சிக்கலை ஏற்படுத்தும். ஆதலால் அவ்வாறு வைக்கக்கூடாத சிலைகள் என்ன என்பதை தெரிந்து கொள்வோம்.

வீட்டின் பூஜை அறையானது வடகிழக்கு, கிழக்கு அல்லது மேற்கு திசையில் இருக்க வேண்டும். ஆனால், வடக்கு அல்லது தென்திசையில் ஒருபோதும் இருக்கக் கூடாது.

பூஜை அறையில் மறந்தும் கூட வைக்கக்கூடாத சிலைகள் என்ன தெரியுமா? | These Idols Should Not Kept Your Pooja Roomவீட்டின் பூஜை அறையில் உக்கிரமாக இருக்கும் தெய்வங்களின் சிலைகளில் ஒருபோதும் வைக்கக் கூடாது. இது வீட்டில் மன அமைதியின்மையை ஏற்படுத்தும். இதனால் வீட்டில் சண்டை சச்சரவுகள் வரும்.

அதுபோல காளி, பைரவர் ராகு-கேது போன்ற கோபமான தெய்வங்களின் சிலையையோ அல்லது படங்களையோ பூஜை அறையில் வைக்க வேண்டாம்.

சனி பகவான் நீதியின் கடவுள் என்று அழைக்கப்படுகிறார். ஆனால், ஜோதிடம் படி சனி பகவானின் சிலையை வீட்டில் வைக்கக் கூடாது. அப்படி வைத்து வழிபடுவது அசுபமாக கருதப்படுகிறது.

ஜோதிட சாஸ்திரங்களின்படி நரசிம்மரின் சிலையை வீட்டில் வைத்து ஒருபோதும் வழிபடக்கூடாது. காரணம் நரசிம்மனின் உக்கிரமான அவதாரத்தால், வீட்டில் சண்டை சச்சரவுகள் வழி வகுக்கும்.

பூஜை அறையில் மறந்தும் கூட வைக்கக்கூடாத சிலைகள் என்ன தெரியுமா? | These Idols Should Not Kept Your Pooja Roomவீட்டின் பூஜை அறையில் தவறுதலாக கூட சிவனின் நடராஜர் சிலையை வைக்க கூடாது. காரணம் இது சிவபெருமானின் களியாட்டத்தை குறிக்கிறது. எனவே, இதை வீட்டில் வைத்து வழிபட்டால் வீட்டில் முரண்பாடுகள் ஏற்படும்.

லட்சுமி தேவி செல்வத்தின் தெய்வமாக கருதப்படுகிறாள். இதனால்தான் எல்லாருடைய வீடுகளிலும் லட்சுமி தேவியின் சிலை அல்லது படம் வைத்து வழிபடுவார்கள். ஆனால், தாமரையின் மீது அமர்ந்திருக்கும் லட்சுமி தேவியின் படத்தை ஒருபோதும் வீட்டு பூஜை அறையில் வைக்க கூடாது என்பதை நினைவில் வைத்துக் கொள்ளுங்கள். இது நல்லதல்ல.

அதுபோல, லட்சுமிதேவி நிற்கும் சிலையை வீட்டில் பூஜை அறையில் ஒருபோதும் வைக்க வேண்டாம். மீறினால், அது நோய்கள் மற்றும் பிரச்சினைகளை கொண்டு வரும்.

முக்கியமாக, வீட்டில் பூஜை அறையில் எந்த ஒரு உடைந்த சிலையை ஒருபோதும் வைக்க கூடாது. அப்படி வைத்தால் உடனே அதை வெளியே போட்டு விடுங்கள். வீட்டில் உடைந்து சிலை பூஜை அறையில் உடைந்த சிலையை வைத்தால் உறவுகளில் சண்டைகளுக்கு வழிவகுக்கும்.   

பூஜை அறையில் மறந்தும் கூட வைக்கக்கூடாத சிலைகள் என்ன தெரியுமா? | These Idols Should Not Kept Your Pooja Room