கடந்த ஐந்து மாதங்களில் முதல் முறையாக உள்நாட்டில் கொரோனா வைரஸ் தொற்று நோயாளிகள் எவரும் அடையாளம் காணப்படவில்லை என அவுஸ்ரேலியா அறிவித்துள்ளது.

அதன்படி, நாட்டில் அதிக எண்ணிக்கையிலான நோயாளிகள் பதிவாகிய விக்டோரியா மாநில தலைநகரான மெல்போர்னில் மக்கள் மீண்டும் வெளியில் செல்லவும் ஆரம்பித்துள்ளதாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் மாநில துணை பிரதமர் ஜேம்ஸ் மெர்லினோ இன்று ஞாயிற்றுக்கிழமை பூஜ்ஜிய புள்ளிவிவரங்களை விக்டோரியாவின் மற்றொரு சிறந்த நாள் என பாராட்டியுள்ளார்.

கொரோனா தொற்றினால் அவுஸ்ரேலியாவில் 27 ஆயிரத்து 595 நோயாளிகள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன் 907 உயிரிழப்புக்கள் பதிவாகியுள்ளமை இங்கு குறிப்பிடத்தக்கது.