பொதுவாக ஜோதிடம் என்பது கோள்களின் நகர்வுகளை அடிப்படையாகக் கொண்டு எதிர்காலத்தைக் கணிக்க முடியும் என்ற ஒரு நம்பிக்கை ஆகும்.

உலகின் பல பகுதிகளிலும் வாழும் மக்களில் கணிசமான தொகையினர் இதனை நம்புகின்றனர்.

ஜோதிடத்திற்கு எவ்விதமான அறிவியல் அடிப்படையும் இல்லை.

அந்த வகையில் "O" என்ற எழுத்தில் பெயர் துவங்குபவர்களின் வாழ்க்கை புத்தாண்டில் எப்படி இருக்க போகின்றது என்பதனை தெரிந்து கொள்வோம்.

"O" என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்களுக்கு 2024 எப்படி இருக்கும்? | Name With O Horoscope 2024 In Tamil

1. இவர்களுக்கு பல நல்ல செய்திகள் கிடைக்கும் அதுமட்டுமின்றி சில குடும்ப இழப்புகளும் இருக்கக்கூடும் என்பதை எண் கணிதத்தின்படி கணிக்கப்பட்டுள்ளது.

2. தொழிலை பொருத்த வரையில் சில ஏற்ற இறக்கங்கள் இருக்கும். நன்கு தெரிந்த ஒருவர் உங்கள் வளர்ச்சியை தடுப்பார்கள். இது தொடர்ந்து நீடித்தால் ஆண்டின் நடுவில் முன்னேற்றம் ஏற்படலாம். வியாபாரிகளுக்கு இடைக்காலத்தில் நஷ்டம் ஏற்படும் அபாயம் இருந்தாலும்,இறுதியில் நல்ல செய்தி காத்திருக்கிறது.

3. கல்வியை பொருத்தவரையில் நிலையான ஒரு கணிப்பு தென்படவில்லை. படிப்பில் முன்னேற்றம் அடைய வழக்கத்தை விட அதிகமாக உழைக்க வேண்டியிருக்கும்.அப்படி படித்தும் தேர்வில் தோல்வி அடையலாம். ஆனால் வருட இறுதியில் நல்ல செய்தி கிடைக்கக்கூடும்.

"O" என்ற எழுத்தில் பெயர் தொடங்குபவர்களுக்கு 2024 எப்படி இருக்கும்? | Name With O Horoscope 2024 In Tamil4. பொதுவான நண்பரின் உதவியால் காதலில் விழக்கூடிய வாய்ப்பு அதிகமுண்டு. காதல் வளர நேரம் எடுக்கும். அதற்கு ஆண்டின் நடுப்பகுதி வரை காத்திருக்க வேண்டும். தவறான புரிதல்களை அமைதியாகக் கையாள வேண்டும்.

5. மார்ச்-ஏப்ரல் மாதத்திற்குள் திருமணத்தில் நல்ல செய்தி கிடைக்கும். மிகவும் மகிழ்ச்சியானதாக இந்த ஆண்டின் திருமண வாழ்க்கை அமையக்கூடும்.வருடத்தின் இறுதிக் காலமானது திருமணத்திற்கு திட்டமிடுபவர்களுக்கு உகந்ததாகும்.

6. உங்கள் அன்புக்குரியவர் அடுத்த ஆண்டு சில நாள்பட்ட நோய்களால் பாதிக்கப்படலாம். மருத்துவரை தவறாமல் பார்த்து வருவது சிறப்பு இல்லாவிட்டால் திடீரென்று ஒரு பெரிய நோய் பற்றிய செய்தி வரலாம்.