குருவின் நட்சத்திர பெயர்ச்சியால் அதிர்ஷ்டத்தினை பெறும் இரண்டு ராசியினரைக் குறித்து தற்போது தெரிந்து கொள்வோம்.

தேவர்களின் குருவான குரு பகவான் ஒரு ராசியில் ஒரு ஆண்டுகாலம் பயணிப்பதுடன், அவ்வப்போது நட்சத்திரத்தையும் மாற்றுகின்றார்.

அவ்வாறு நட்சத்திர மாற்றத்தின் போது சில ராசியினர் அதிர்ஷ்டத்தினைப் பெறுவார்கள். இந்நிலையில் வருகிற செப்டம்பர் 22ம் தேதி குரு பகவான் மிருகசீரிடம் நட்சத்திரத்தின் இரண்டாம் பாதத்தில் பயணிக்கவுள்ளார். இந்த நட்சத்திரத்தில் நவம்வர் மாதம் வரை குரு பகவான் பயணிக்க உள்ளார்.

இந்த மிருகசீரிடம் நட்சத்திரத்தில் குரு பகவான் பயணிக்கும் போது, அதன் தாக்கம் அனைத்து ராசிகளிலுமே காணப்பட்டாலும், சில ராசிக்காரர்களுக்கு மிகவும் அற்புதமாக இருக்கப் போகிறது. இப்போது அந்த அதிர்ஷ்ட ராசிக்காரர்கள் யார்யார் என்பதைக் காண்போம்.

குரு நட்சத்திர பெயர்ச்சி... ராஜயோகத்தை பெறும் 2 ராசியினர் | Guru Peyarchi These Zodiac Signs Very Lucky

மேஷம்

குருவின் இந்த நட்சத்திர பெயர்ச்சியினால் மேஷ ராசியினருக்கு அனைத்து துறைகளிலும் வெற்றிகள் கிடைப்பதுடன், நிதி நிலையில் முன்னேற்றமும் ஏற்படுகின்றது. புதிய ஆதாரங்களைப் பெறுவதுடன், வெளிநாடு செல்ல வேண்டும் என்ற கனவும் நனவாகும். பணியிடத்திலும் நல்ல முன்னேற்றம் கிடைப்பதுடன், இந்த காலத்தில் புதிய தொழில் தொடங்கினால் நல்ல பலனைப் பெறலாம்.

குரு நட்சத்திர பெயர்ச்சி... ராஜயோகத்தை பெறும் 2 ராசியினர் | Guru Peyarchi These Zodiac Signs Very Lucky

விருச்சிகம்

குருவின் நட்சத்திர பெயர்ச்சியினால் விருச்சிக ராசியினர் சிறப்பான பலன்களை பெறுகின்றனர். கடின உழைப்பிற்கான பலனை நிச்சயம் பெறும் நிலையில், பணியிடத்தில் உயர் அதிகாரிகளின் ஆதரவும் கிடைக்கும். பதவி உயர்வு மற்றும் சம்பள உயர்வும் கிடைப்பதற்கு வாய்ப்பு உள்ளது. புதிய வருமான ஆதாரங்கள் கிடைப்பதுடன், ஆரோக்கியமும் சிறப்பாகவே இருக்கும்.

குரு நட்சத்திர பெயர்ச்சி... ராஜயோகத்தை பெறும் 2 ராசியினர் | Guru Peyarchi These Zodiac Signs Very Lucky