பிரித்தானியாவில் 2 டீன் ஏஜ் சிறுவர்கள் காரை திருடி கொண்டு போன நிலையில் அதன் உள்ளே இரண்டு குழந்தைகள் இருந்ததும் தெரியவந்துள்ளது.
பிர்மிங்காமில் தான் இந்த சம்பவம் நடந்துள்ளது. அங்கு நின்றிருந்த காரை இரண்டு சிறுவர்கள் திருடி சென்று போயுள்ளனர்.
இதையறிந்த காரின் உரிமையாளரான தம்பதி அதிர்ச்சியடைந்து பொலிசுக்கு தகவல் கொடுத்தனர்.
மேலும் காரின் பின் இருக்கையில் தங்களது 2 மற்றும் 4 வயதான குழந்தைகள் இருப்பதாகவும் கூறினார்கள்.
இதையடுத்து அந்த காரை துரத்தி கொண்டு சென்ற பொலிசார் சாமர்த்தியமாக செயல்பட்டு தடுத்து நிறுத்தினர்.
பின்னர் காரில் இருந்து குழந்தைகள் பத்திரமாக மீட்கப்பட்ட நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக 15 வயது சிறுவர்கள் இருவரை பொலிசார் கைது செய்துள்ளனர்.
இது குறித்து தலைமை ஆய்வாளர் லீ விகன் கூறுகையில், இது போன்ற சம்பவம் பெற்றோர்களுக்கு மோசமான அனுபவமாகவே இருக்கும்.
நல்லவேளையாக கார் திருடு போன அடுத்த 15 நிமிடங்களில் அதை பிடித்து விட்டோம்.
அதில் பங்களிப்பை அளித்த அனைத்து அதிகாரிகளுக்கும் நன்றி என கூறியுள்ளார்.